Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஏற்றம் தருபவள்

ஏற்றம் தருபவள்

ஏற்றம் தருபவள்

ஏற்றம் தருபவள்

ADDED : ஜன 26, 2024 08:08 AM


Google News
Latest Tamil News
குழந்தைக்கு எப்போது பசிக்கும் என அறிந்து அமுதுாட்டுபவள் தாய். அதைப்போல உலக உயிர்களின் துன்பத்தை போக்கி இன்பத்தை நல்கி ஏற்றம் தருபவள் லோகமாதா. அவளை உலகத்தின் தாய் (ஜகன் மாதா)என வேதங்கள் போற்றுகின்றன.

அன்னையின் அருளை எல்லோரும் பெறும் பொருட்டு பாரதத்தின் பல்வேறு இடங்களில் ஸ்ரீ சக்கர வழிபாட்டை நிறுவினர். குறிப்பாக, தமிழகத்திலுள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், திருவானைக்கா, குற்றாலம், சங்கரன் கோவில் போன்ற தலங்களில் அம்பாள் வழிபாடு பிரசித்தி பெற்றது. அங்குள்ள ஸ்ரீ சக்கர வழிபாடும் மகத்துவம் நிறைந்தது.

கைலாய மலை சிவபெருமானுக்குரியது. மகாமேரு அம்பாளுக்குரியது என ஆகமங்கள் கூறுகின்றன.சேலம் மாவட்டம் நாகலுாருக்கு அருகில் உள்ளது ஸ்ரீசக்கர மகாமேரு கோயில். இக்கோயிலின் மூலவர் லலிதா திரிபுர சுந்தரி. மூலஸ்தான அம்பாளின் மகாமேரு விமானம் 42 அடி உயரம் கருங்கல்லால் உருவாக்கியது.

அம்பாளின் வலது புறத்தில் விநாயகர், சுப்பிரமணியர், இடதுபுறத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதிகள் உள்ளது. சிம்ம, ஒன்பது பலிபீடம், பிரகாரத்தில் மரத்தினால் செய்யப்பட்ட 12 அடி உயரத்தில் மயில் மீது அருள் பாலிக்கும் சரஸ்வதி, விஸ்வரூப மகாவிஷ்ணு, நடராஜர் சிலை உள்ளன. கோயில் முன்னால் 30 அடி உயர சிவபெருமான் சிலையும், புத்தர் சிலைக்கு எதிரே பக்தர்கள் தியானம் செய்ய மண்டபமும் உள்ளது. கோயிலில் தினமும் காலை 6:30 கணபதி ஹோமம், 7:00 மணிக்கு கோமாதா பூஜை 7:30யில் இருந்து மாலை 6:30 மணிவரை அம்பாளை தரிசனம் செய்யலாம்.

ஆண்டு வருட பிறப்பு, மாதபிறப்பு, பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடும், அம்பாளின் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

நவராத்திரி, தீபாவளி, பொங்கல் நாள்களில் விசேஷ பூஜை உண்டு.

-குமார சிவாச்சாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us