Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நினைத்தேன்... சிரித்தேன்!

நினைத்தேன்... சிரித்தேன்!

நினைத்தேன்... சிரித்தேன்!

நினைத்தேன்... சிரித்தேன்!

ADDED : ஜன 26, 2024 07:40 AM


Google News
ஒருநாள் பசுவை ஒருவன் கொல்ல வந்தான். இதை அறிந்த பசு சிரித்தது. இதற்கு அவன், ''நான் உன்னை கொல்ல வந்துள்ளேன். இருந்தாலும் நீ எதற்காக சிரிக்கிறாய்'' எனக்கேட்டான்.

அதற்கு பசு, ''நான் சாப்பிடுவதோ வெறும் புல். ஆனால் இப்போது பிற உயிர்களை சாப்பிடும் ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உணவாகப் போகிறேன். எனது ரத்தத்தை பாலாக மாற்றி உங்களை ஆளாக்கினேன். உங்கள் குழந்தைகளையும் வளர்க்கிறேன். பாலில் இருந்து வெண்ணெய் எடுத்தீர்கள். இதில் இருந்து நெய்யை செய்தீர்கள்.

இப்படி எல்லாமே பயன்படுத்தினீர்கள். ஆனால் எனக்கு அழுகிப்போன பழங்கள், காய்கறிகளை கொடுத்தீர்கள். இதையும் ஏற்றுக் கொண்டேன். சரி. என்னுடைய சாணத்தையாவது விட்டுவைத்தீர்களா. அதுவும் இல்லை. சமையலுக்கு வறட்டி தட்டி பயன்படுத்தினீர்கள். விவசாயத்திற்கு உரமாக உபயோகித்தீர்கள். அதிலும் என் கோமியத்தையாவது விட்டுவைத்தீர்களா. அதுவும் கிருமிநாசினி என்று வீட்டில் தெளித்தீர்கள். இப்படி எல்லாவற்றையும் பயன்படுத்திவிட்டீர்கள். கடைசியில் என் உடல்தான் உள்ளது. அதையும் சாப்பிடுங்கள். பின் என் தோலையும் பயன்படுத்துங்கள்'' என்றது. இதையெல்லாம் கேட்டவனின் தலை சுற்றியது. கண்களில் கண்ணீர் வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us