Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/முதல் வரம்

முதல் வரம்

முதல் வரம்

முதல் வரம்

ADDED : ஜன 26, 2024 07:30 AM


Google News
கடவுளிடம் கேட்க வேண்டிய முதல் வரம் என்ன தெரியுமா... அவருக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வேண்டுவதுதான். ஆம். நமக்கு அருமையான மனிதப் பிறவியை கொடுத்துள்ளார். பல கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுகிறார். இப்படிப்பட்ட பகவானுக்கு நாம் எத்தனைமுறை நன்றி கூறினாலும் போதாது.

ஆனால் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பாக ஒரு செயலில் ஈடுபடலாம். அதுதான் தொண்டு. கோயிலை சுத்தம் செய்வது, கோலமிடுவது, பூக்களால் மாலை தொடுத்து கொடுப்பது போன்ற செயல்களை செய்யலாம்.

இதனால் முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் தொலையும். இதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனந்தாழ்வார். இவர் தன் குருநாதர் ஸ்ரீராமானுஜரின் சொல் கேட்டு திருப்பதி பெருமாளுக்கு தொண்டு செய்து வந்தார்.

இதற்காக கர்ப்பிணியான மனைவியுடன் வனவிலங்குகள் சூழ்ந்த திருப்பதிக்கு சென்று நந்தவனம் அமைத்தார். தினமும் கோயிலில் பூப்பறித்தல், மாலை தொடுத்தலையே வாழ்க்கையாக கொண்டு புண்ணியத்தை சேர்த்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us