விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 2

ADDED : பிப் 05, 2025 01:21 PM

பக்திநெறி அருளும் பக்த கணபதி
கணம் என்றால் கூட்டம், குழு என்று பொருள். பக்த கணபதி என்றால் பக்தர்களின் கூட்டங்களுக்குத் தலைவர் என்று பொருள்..
வலது மேல் கையில் வாழைப்பழம், வலது கீழ்க்கையில் மாம்பழம், இடது மேல் கையில் தேங்காய், இடது கீழ்க்கையில் பாயசம் உள்ள பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவராக, வலக்காலை குத்திட்டு, இடக்காலை மடக்கி நீட்டியவராக, தாமரை இருக்கையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பவர் பக்த கணபதி.
தியான சுலோகம்
நாளிகேராSம்ர கத3லீ கு3ட3பாயஸ தா4ரிணம் |
சரச்சந்த்3ராப4வபுஷம் பஜே பக்த கணாதிபம் ||
நாளிகேர - தேங்காய்
ஆம்ர - (புளிப்பு சுவை உள்ள) மாம்பழம்
கதலீ - வாழைப்பழம்
குடபாயஸ - வெல்லம், பருப்பு கலந்த பால் பாயசம் உள்ள குடம்
தாரிணம் - (ஆகியவற்றை) நான்கு கைகளில் வைத்திருப்பவரும்
ஸரச்சந்த்ராப - குளிர்காலத்து நிலவின் நிறத்தைக் கொண்டவரும்
வபுஷம் - வெண்மை நிறத் திருமேனி கொண்டவருமான
பக்த கணாதிபம் - பக்த கணபதி எனும் கணேசரை
பஜே - வணங்குகிறேன்
தேங்காய்: பிறப்பு, இறப்பு எனும் பிறவிச் சங்கிலியில் இருந்து விடுபட்டு, இறைவன் திருவடியாகிய வீடுபேற்றை உயிர் பெற வேண்டும் என்பதைக் குறிப்பது.
வாழைப் பழம்: மும்மலங்களில் இருந்து நீங்கி ஞானம் பெற்ற ஆன்மா, கனிந்து இனிப் பிறவாதவாறு, இறைவன் திருவடி அடைவதைக் குறிப்பது.
மாம்பழம்: இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பாயச பாத்திரம்: ஆன்மாவின் பக்குவ நிலையையும் இறைவனின் அருளையும் குறிக்கும்.
பலன்: வழிபாட்டிற்குத் தேவையான, அடிப்படைக் காரணமான பக்தி பெருகும்; ஞானம் கிட்டும்; குருவருள் கிடைக்கும். மகப்பேறு உண்டாகும். செயல்கள் நிறைவேறும்
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி சிவஸ்ரீ வி. சோமசேகர குருக்கள்