ADDED : பிப் 05, 2025 01:20 PM

மனிதர்களால் செய்ய இயலாத செயல்கள் மகான்களால் சாத்தியமாகும். இதற்கு உதாரணங்கள் புராணங்களில் ஏராளமாக உள்ளன. காஞ்சி மஹாபெரியவர் வாழ்ந்த காலத்தில் நடந்ததை இங்கு பார்க்கலாம்.
1933ல் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதுாரில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்குள்ள மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரோட்டத்தன்று தேரின் அடியில் போட்ட முட்டுக்கட்டைகள் பாரம் தாங்காமல் நசுங்கியதால், 'கோடிமூலை' என்னும் இடத்தில் தேர் பள்ளத்தில் சிக்கியது. பக்தர்கள் எத்தனை முயற்சி செய்தும் சிறிதும் அசையவில்லை. இதை அறிந்த மஹாபெரியவர் வேகமாக முகாமை விட்டு வெளியேறினார்.
மகானைத் தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் 'பெரியவா... வேகமாக எங்கே போகிறார்' என அறியும் ஆவலில் பின்தொடர்ந்தனர்.
தேர் தடைபட்டு நிற்கும் இடத்தின் அருகில் வந்ததும் தேரில் இருந்த மகாலிங்க சுவாமியைத் தரிசித்தார். வலம் வந்து வழிபட்ட அவர், தேரின் வடத்தை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றி கொண்டார். கூடியிருந்த மக்களிடம், 'அனைவரும் ஒற்றுமையாக வடத்தை இழுங்கள்' என்றார். 'மகாலிங்கம்... மகாலிங்கம்... மகாலிங்கம்...' என்ற கோஷம் முழங்க வடத்தை இழுக்க, குழந்தை போல தேர் மெல்ல நகர்ந்தது.
ஊர் கூடித் தேர் இழுத்தது என்பார்களே... அது போலத்தான்.
காஞ்சி மஹாபெரியவரின் ஆசியும், பக்தர்களின் முயற்சியும் ஒன்று சேரவே தேர் ஓட ஆரம்பித்தது. அன்று மாலையில் வடக்கு வீதியில் சிவாச்சாரியார்கள் பூஜை நடத்திய பின்னர், தேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் மீண்டும் பக்தர்கள் இழுக்க தேர் நிலைக்கு வந்ததது.
என்ன செய்தும் பள்ளத்தில் இருந்து மேலே ஏற்ற முடியாத தேரை 'மஹாபெரியவா' என்ற மாபெரும் சக்திதான்
இழுத்துக் கொண்டு வந்தது என்றால் அதுதான் நிதர்சனம்!
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com