ADDED : அக் 09, 2024 01:12 PM

ஒருவருக்குக் கஷ்டம் வந்தாலும் சரி... நஷ்டம் வந்தாலும் சரி... அதை அவனவன் தலையெழுத்து என்கிறோம். இதை எழுதும் பிரம்மாவைப் பற்றி காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார். நம் தலையெழுத்தை எழுதுபவர் சரஸ்வதியின் கணவரான பிரம்மா... இவர் மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர்களான சிவன், மகாவிஷ்ணுவுக்கு பல கோயில்கள் உள்ளன. ஆனால் பிரம்மாவுக்கு அப்படி இல்லை.
நம் தலையெழுத்தை எழுதுபவரின் தலையெழுத்து இப்படியா என யோசிக்காதீர்கள். முன்பு ஐந்து தலைகள் கொண்டவராக பிரம்மா இருந்தார். ஒருமுறை சிவபெருமான் அவரின் ஒரு தலையை எடுத்ததால், 'நான்முகன்' ஆக மாறினார். இந்த வரலாற்றின் அடிப்படையில் திருவையாறுக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் உள்ள சிவனுக்கு 'பிரம்மசிரக் கண்டீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. இதற்கு பிரம்மாவின் தலையைக் கொய்தவர் எனப் பொருள். இந்தக் கோயிலில் பிரம்மாவுக்கு சன்னதி உள்ளது. தமிழகத்தில் கும்பகோணம், திருப்பட்டூரிலும், ராஜஸ்தானில் புஷ்கரிலும் பிரம்மாவுக்கு கோயில்கள் உள்ளன.
விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம், சரஸ்வதி பூஜை, மகாசிவராத்திரி... இவை போக இன்னும் பல பண்டிகைகள் உள்ளன. பஞ்சாங்கத்தைப் புரட்டினால் தினமும் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ என ஒவ்வொரு தெய்வத்துக்கான பண்டிகை வரும்.
இப்படி பல தெய்வத்திற்கு பண்டிகைகள் வந்தாலும் பிரம்மாவுக்கு என தனியாக நாம் கொண்டாடுவதில்லை. வீட்டில் சுவாமி படங்கள் வைத்திருந்தாலும் அதில் பிரம்மாவுக்கு இடம் உண்டா? சயனக்கோலத்தில் மகாவிஷ்ணு படம் இருந்தால் அவரின் நாபிக் கமலத்தில் பிரம்மா இருப்பார். திருக்கல்யாணப் படம் இருந்தால் அதில் திருமணம் நடத்தி வைக்கும் சாஸ்திரிகளாக பிரம்மா இருப்பார். எனவே வீட்டிலேயே அவரது அருளை பெறுவோம்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com