தோட்டம் ஒன்றில் அத்தி மரத்தை நட்டு வளர்த்தார் தோட்டக்காரர். ஆனால் அது நீண்டநாள் வளர்த்தும் பலன் தரவில்லை. “மூன்றாண்டாக இடத்தை வீணாக அடைத்திருக்கும் இந்த மரத்தை வெட்டு” என்றார். அதற்கு பணியாளர், “ஓராண்டு பொறுங்கள். மரத்திற்கு எரு உரம் வைக்கிறேன். அப்போதும் பலன் தராவிட்டால் வெட்டலாம்” என்றார். பலன் தராத மரம் தோட்டத்தில் இருக்கும் உரிமையை இழந்துவிடும் என்பது தோட்டக்காரரின் எண்ணம்.
ஆனால் மரத்தின் சார்பாக இன்னொரு வாய்ப்பைக் கேட்டார் பணியாளர். மரத்தைப் போல நாமும் சக மனிதர்களுக்கு பயன் தர வேண்டும். இல்லாவிட்டால் பலன் தராத வெற்று மரம் போலத்தான்.
ஆனால் மரத்தின் சார்பாக இன்னொரு வாய்ப்பைக் கேட்டார் பணியாளர். மரத்தைப் போல நாமும் சக மனிதர்களுக்கு பயன் தர வேண்டும். இல்லாவிட்டால் பலன் தராத வெற்று மரம் போலத்தான்.