Dinamalar-Logo
Dinamalar Logo


பரிசு

பரிசு

பரிசு

ADDED : அக் 25, 2024 08:10 AM


Google News
Latest Tamil News
ஏழைப்பெண் ஒருத்தி கிருஷ்ணரின் பக்தையாக இருந்தாள். துவாரகை மன்னரான கிருஷ்ணரை அரண்மனையில் சந்தித்தாள். ''பகவானே... உங்களுக்கு சேவை செய்வதை தவிர வேறு மகிழ்ச்சி இல்லை'' என்றாள். அவள் அதிர்ச்சியடையும் விதமாக ஒரு கோணிப்பையை கொடுத்த கிருஷ்ணர், ''நான் செல்லும் இடமெல்லாம் துாக்கி வா! இன்னொரு விஷயம், உன்னைத் தவிர மற்றவர் கண்ணுக்கு இது தெரியாது'' என்றார்.

பக்திப்பூர்வமாக எதையாவது செய்ய நினைத்தால், இப்படி அழுக்கு மூட்டையை சுமக்க விடுகிறாரே என வருத்தப்பட்டாள். சுமப்பதற்கு சிரமப்பட்ட நேரத்தில் அவ்வப்போது கிருஷ்ணர் கைகொடுத்தார். இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

''நீ சுமந்தது போதும்; மூட்டையை இறக்கி வைக்கலாம்'' என்றார் கிருஷ்ணர், ''மூட்டைக்குள் என்ன இருக்கிறது என பார்ப்போமா?'' என்று சொல்லி சிரித்தார். முடிச்சு தானாக அவிழ்ந்து பொன்னும் மணியுமாக சிந்தியது. ''இதுவரை பொறுமையுடன் துாக்கிய உனக்கு இது என் பரிசு'' என்றார்.

'' மன்னிக்க வேண்டும் பகவானே! உண்மை தெரிந்திருந்தால் இந்த சுமை சுகமாக இருந்திருக்கும்'' என வருந்தினாள். இப்படித்தான் வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு. அதை சுமையாக நினைப்பதும் சுகமாக அனுபவிப்பதும் அவரவர் மனதை பொறுத்தது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us