Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

ADDED : அக் 29, 2024 12:23 PM


Google News
Latest Tamil News
பணநெருக்கடி இன்றி நிம்மதியாக வாழ்வது எப்படி என விளக்குகிறார் காஞ்சி மஹாபெரியவர்.

மனிதன் தன் தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்வதால், எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதி இருப்பதில்லை. செலவுக்கான காரணம் தெரிந்தாலும் அதை தடுக்க, குறைக்க முடிவதில்லை.

எளிமையாக வாழ யாரும் விரும்புவதில்லை. கிராமத்தை விட்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் மராமத்து செய்யாமல் பாழாகின்றன. நகரத்திற்கு சென்ற பிறகு நாகரிகம் என்ற பெயரில் தேவைக்கும் அதிகமாக சாமான்கள், உடைகள் வாங்கி குவிக்கின்றனர். இதனால் இடப்பற்றாக்குறையால் கூடுதல் வாடகைக்கு இடம் தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பணத்தின் மீதுள்ள மோகத்தால் எங்கும் பரபரப்பு. நிதானத்துக்கு சிறிதும் இடமில்லை. தற்காலத்தில் மக்கள் ஆடம்பரமாக வாழ்வதால் பணநெருக்கடியை சந்திக்கின்றனர். இதை விட்டு விட்டு நிம்மதியாக வாழ்வதற்கு வழி தேட வேண்டும்.

* உணவு, உடைகளில் எளிமையை பின்பற்றுவது அவசியம்.

* காபிக்குப் பதிலாக கோதுமைக் கஞ்சி அல்லது மோர் குடிக்கலாம். காபிக்கொட்டை, பாலுக்காக அதிகளவு பணம் செலவாகிறது. அரிசி, பருப்புக்குக் கூட இந்த அளவு செலவு ஏற்படுவதில்லை.

* பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கக்கூடாது. குறைந்த செலவில் திருமணத்தை நடத்த வேண்டும்.

* வீண் பொழுது போக்குகளை குறைத்து ஆன்மிகம் அல்லது குடும்ப பணிகளில் ஈடுபடுங்கள்.

இவற்றை பின்பற்றினால் நிம்மதி குடியிருக்கும்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* ஏகாதசி விரதம் இருந்தால் வாழ்வு சிறக்கும்.

* வியாழனன்று விரதம் இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.

* உண்ணும்போது காலணி அணிய வேண்டாம்.

* பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனவலிமை அதிகரிக்கும்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us