ADDED : செப் 23, 2024 09:13 AM

சந்தேகம் கூடாது
அன்று விடுமுறை. காலையிலேயே ராமசாமி தாத்தா வீட்டிற்கு வந்தான் கந்தன். ''என்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பன் வசந்தன். அவனோட அப்பா எப்போது பார்த்தாலும் அவனிடம் நல்லா படிச்சியா; ேஹாம் ஒர்க் சரியா எழுதினாயா என சந்தேகத்துடன் கேட்டுக்கிட்டே இருப்பார். அவனோட அம்மாவையும், 'ஏன் வாசல்ல நிக்கிற? ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?'' என அடிக்கடி கேட்பாருன்னு அடிக்கடி வருத்தப்படுவான்.
இப்படி சந்தேக புத்தியுள்ளவர்களை பற்றி பகவத்கீதை, திருக்குறளில் என்ன சொல்லி இருக்கு'' எனக் கேட்டான்.
சந்தேகப்படுதல் என்பது மனநோய். அதை வளர விடக் கூடாது. நம்பிக்கை அளிக்கும் நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்த வேண்டும். சந்தேக புத்தி இருப்பவனுக்கு மேல் உலகமும் இல்லை கீழான உலகமும் இல்லை என்கிறார் பகவான் கிருஷ்ணர். நான்காம் அத்யாயம் 40வது ஸலோகத்தில்
அஜ்ஞஸ் ²சாஸ் ²ரத் ³த ³தா 4நஸ் ²ச ஸம்ஸ ²யாத்மா விநஸ் ²யதி|
நாயம் லோகோ 5 ஸ்தி ந பரோ ந ஸுக ²ம் ஸம்ஸ ²யாத்மந:
||4-40||
அறிவும், அக்கறையும் இல்லாமல் சந்தேகத்தை இயல்பாக கொண்டு வாழ்பவன் அழிவான். அவனுக்கு இவ்வுலகம், மேலுலக வாழ்வு இல்லை; இன்பமும் கிடையாது. உண்மைப் பொருளான கடவுளை தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவனுக்கு நிச்சயமாக மேலுலகம் கிடைக்கும் என திருவள்ளுவர் 353வது திருக்குறளில் சொல்கிறார்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
சந்தேகத்தில் இருந்து விலகி மெய் உணர்வு பெற்றவர்களுக்கு இவ்வுலக வாழ்வும் கிடைக்கும். மேலுலக வாழ்வும் அவர்களை நெருங்கி வரும்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554