Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பகவத்கீதையும் திருக்குறளும் -- 16

பகவத்கீதையும் திருக்குறளும் -- 16

பகவத்கீதையும் திருக்குறளும் -- 16

பகவத்கீதையும் திருக்குறளும் -- 16

ADDED : ஆக 30, 2024 12:06 PM


Google News
Latest Tamil News
பக்தனாக இரு

விடுமுறை என்பதால் காலையிலேயே ராமசாமி தாத்தாவை தேடி வந்தான் கந்தன். ''உங்கள் மகன்கள் வெளிநாட்டில் இருக்காங்களே... நீங்க ஏன் அங்கு போகலை?''எனக் கேட்டான். '' என் இஷ்ட தெய்வம் கிருஷ்ணர் என்பது உனக்கு தான் தெரியுமே... பகவத் கீதையை ஆழ்ந்து படித்த பின் பந்த பாசம் எல்லாம் என்னை விட்டுப் போகணும்னு எண்ணம் வந்துடுச்சு.

கிருஷ்ணர் மீது பற்று வைத்தால் பாசபந்தம் என்னும் கட்டு விலகும் என்பதை பகவான் கிருஷ்ணர் கீதையின் 3ம் அத்தியாயம் 17ம் ஸ்லோகத்தில் சொல்கிறார்.

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா ³த்மத்ருப்தஸ் ²ச மாநவ:|ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித் ³யதே

||3-17||

பக்தனாக இருப்பவன் தன்னிலே தான் இன்புறுவான்; தன்னிலே தான் திருப்தியடைவான்; தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான், அவனுக்கு எதன் மீதும் பற்று இருக்காது. இதனை திருவள்ளுவரும் 364வது திருக்குறளில்

துாஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

ஆசை இல்லாமல் இருப்பதே துாய்மையான நிலையாகும். மெய்ப்பொருளான கடவுளை விரும்புபவர்கள் இந்நிலையை அடைவார்கள். அதனால் தான் இங்கேயே இருந்து கிருஷ்ண பக்தியில்ஈடுபடுகிறேன்''என்றார்.

-தொடரும்எல்.ராதிகா

97894 50554





      Our Apps Available On




      Dinamalar

      Follow us