ADDED : செப் 01, 2024 12:38 PM
துறவி ஒருவரை சந்திக்கச் சென்றார் ஆணவம் மிக்க பண்டிதர் ஒருவர். அவருக்கு தரப்பட்ட ஆசனம் தாழ்வான இடத்தில் இருந்ததால் கோபப்பட்டார்.
“உயர்ந்த இடத்தில் ஆசனம் தராமல் அவமதிக்கிறீர்'' என்றார் பண்டிதர்.
''என் ஆசனத்தில் நீங்கள் அமருங்கள். உங்கள் ஆசனத்தில் நான் அமர்கிறேன்'' என்றார் துறவி. சமாதானம் அடைந்தார் பண்டிதர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மரத்தில் உள்ள குருவிகளின் கீச்சொலி இடைஞ்சலாக இருந்தது. பண்டிதர் அண்ணாந்து பார்த்தார்.
“இந்த குருவிகள் மெத்த படித்தது போல! அதனால் உங்களையும் விட உயர்ந்த இடத்தில் இருந்து பேசுகின்றன'' என்றார் துறவி.
பண்டிதர் முகத்தில் ஈயாடவில்லை.