Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தவமும் தானமும்

தவமும் தானமும்

தவமும் தானமும்

தவமும் தானமும்

ADDED : ஆக 30, 2024 09:35 AM


Google News
தினமும் சிவபூஜை செய்து தவத்தில் ஈடுபட்டாள் பார்வதி. அவளின் தவம் நிறைவேறி சிவனை சேரும் காலம் நெருங்கியது. அப்போது திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார் சிவன். திடீரென சிறுவன் ஒருவன் அலறும் சத்தம் கேட்டது.

அருகிலுள்ள குளத்தில் வசித்த முதலை ஒன்று சிறுவனின் வலது காலை பற்றியிருந்தது. அவனை விடுவிக்கும்படி வேண்டினாள்.

''உணவுக்கு என்ன செய்வேன்'' எனக் கேட்டது முதலை. ''பாவம் இவன் சிறுவன். என் தவப்பயனை தருகிறேன். உனக்கு பசிக்காது'' என்றாள்.

''அப்படியானால் உன் கதி என்னாகும்'' எனக் கேட்க, ''தவத்தில் மீண்டும் ஈடுபடுவேன்'' என பதிலளித்தாள். உடனே முதலை அங்கிருந்து மறைந்து சிவன் காட்சியளித்தார். ''தவம், தான பலனை பிறர் நலனுக்காக அர்ப்பணித்தால் அது பெருகும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us