Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஏப் 24, 2020 09:42 AM


Google News
ஏப்.26 - அட்சய திரிதியை

ஏப்.24, சித்திரை 11: சந்திர தரிசனம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் பிட்சாண்ட உற்ஸவம், செம்பொனார் கோவில் சிவன் பவனி, ஸ்ரீரங்கம் பெருமாள் ஆளும் பல்லக்கு, மதுரை வீரராகவப்பெருமாள் பவனி, கீழ்த் திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை

ஏப்.25, சித்திரை 12: திரேதா யுகாதி, கார்த்திகை விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் பவனி, திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்பக விமானம், வேலுார் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர், உய்யக்கொண்டான் திருநட்சத்திரம்

ஏப்.26, சித்திரை 13: முகூர்த்த நாள், அட்சய திரிதியை, கும்பகோணம் பெரியகடைத் தெருவில் 12 கருடசேவை, மதுரை சொக்கநாதர் பூத அன்னவாகனம், ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர், துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் குதிரை வாகனம், வீரபாண்டி கவுமாரி கருடவாகனம், மங்கையற்கரசி நாயனார் குருபூஜை, எங்களாழ்வான் திருநட்சத்திரம்

ஏப்.27, சித்திரை 14: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், உத்தரகோசமங்கை மங்கேஸ்வரி உற்ஸவம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனம், திருச்செங்காட்டங்குடி உத்தரபதீஸ்வரர் தேர், திருச்சி, சங்கரன் கோவில், கடையம், இலஞ்சி, திருப்பனந்தாள், சீர்காழி, திருவையாறு, திருத்தணி இத்தலங்களில் சிவன் உற்ஸவம் ஆரம்பம்

ஏப்.28, சித்திரை 15: சங்கர ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கு, திருச்சி தாயுமானவர் கற்பக விருட்சம், அம்மன் காமதேனு வாகனம், துாத்துக்குடி ஸ்ரீஅம்பாள் ஞானசம்பந்தருக்கு பாலுாட்டுதல், விறல் மீண்ட நாயனார் குருபூஜை, எம்பெருமான், சோமயாஜியாண்டன், கிடாம்பி ராமானுஜ பிள்ளான் திருநட்சத்திரம், கரிநாள்

ஏப்.29, சித்திரை 16: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், மதுரை வீரராகவப் பெருமாள் தேர், திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம், துாத்துக்குடி சிவன், அம்மன் ரிஷப சேவை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர்பறி லீலை, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அன்ன வாகனம், கச்சியப்பர் குருபூஜை, முதலியாண்டான் திருநட்சத்திரம்

ஏப்.30, சித்திரை 17: மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவசமய ஸ்தாபித லீலை, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனம், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி கேடய வாகனம், சீர்காழி சிவன் வெள்ளித்தேர், திருத்தணி சிவன் வெள்ளி நாகவாகனம், ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் மூஷிக வாகனம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us