Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வந்தாள் மகாலட்சுமியே! என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!!

வந்தாள் மகாலட்சுமியே! என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!!

வந்தாள் மகாலட்சுமியே! என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!!

வந்தாள் மகாலட்சுமியே! என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!!

ADDED : ஏப் 24, 2020 09:44 AM


Google News
Latest Tamil News
அட்சய திரிதியை நாளில் பாரதியார் பக்திப் பாடல்களைப் பாடுங்கள்

மலரின் மேவு திருவே! உன் மேல்

யைல் பொங்கி நின்றேன்;

நிலவு செய்யும் முகமும்காண்பார்

நினைவ ழிக்கும் விழியும்,

கலக லென்ற மொழியும்தெய்வக்

களிது லங்கு நகையும்,

இலகு செல்வ வடிவும்கண்டுன்

இன்பம் வேண்டு கின்றேன்

கமல மேவு திருவே!நின்மேல்

காதலாகி நின்றேன்.

குமரி நின்னை இங்கேபெற்றோர்

கோடி யின்ப முற்றார்;

அமரர் போல வாழ்வேன்,என்மேல்

அன்பு கொள்வை யாயின்

இமமய வெற்பின் மோத,நின்மேல்

இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும்நினது

வரிசை பாட வைப்பேன்!

நாணி யேக லாமோ?என்னை

நன்க றிந்தி லாயோ?

பேணி வைய மெல்லாம்நன்மை

பெருக வைக்கும் விரதம்

பூணு மைந்த ரெல்லாம்கண்ணன்

பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும்சுடர்செய்

பூண்க ளேந்தி வந்தாய்!

மின்னு நின்தன் வடிவிற்பணிகள்

மேவி நிற்கும் அழகை

என்னு ரைப்ப னேடீ!திருவே!

என்னு யிக்கொ ரமுதே!

நின்னை மார்பு சேரத்தழுவி

நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்திநின்னாற்

செம்மை யேறி வாழ்வேன்;

இல்லை என்ற கொடுமைஉலகில்

இல்லை யாக வைப்பேன்;

முல்லை போன்ற முறுவல்காட்டி

மோக வாதை நீக்கி,

எல்லை யற்ற சுவையே!எனை நீ

என்றும் வாழ வைப்பாய்.

மாதவன் சக்தியினைச் செய்ய

மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;

போதுமிவ் வறுமையெலாம்எந்தப்

போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே

வேதனைப் படுமனமும்உயர்

வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்

வாதனை பொறுக்கவில்லைஅன்னை

மாமக ளடியிணை சரண் புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும்தொழில்

கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே

மூழ்கிய விளக்கினைப் போல்செய்யும்

முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,

ஏழ்கட லோடியுமோர்பயன்

எய்திட வழியின்றி இருப்பதுவும்,

வீழ்கஇக்கொடு நோய்தான்வைய

மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள்அது

பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;

ஏற்குமோர் தாமரைப்பூஅதில்

இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;

நாற்கரந் தானுடையாள்அந்த

நான்கினும் பலவகைத் திருவுடையாள்;

வேற்கரு விழியுடையாள்செய்ய

மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலேஅன்பு

நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;

தோரணப் பந்தரிலும்பசுத்

தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,

வீரர்தந் தோளினிலும்உடல்

வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்

பாரதி சிரத்தினிலும்ஒளி

பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் நறும்

பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,

கன்னியர் நகைப்பினிலும்செழுங்

காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,

முன்னிய தணிவினிலும்மன்னர்

முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்

பன்னிநற் புகழ்பாடிஅவள்

பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம்.

மண்ணினுட் கனிகளிலும்மலை

வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,

புண்ணிய வேள்வியிலும்உயர்

புகழிலும் மதியிலும் புதுமையிலும்

பண்ணுநற் பாவையிலும்நல்ல

பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,

நண்ணிய தேவிதனைஎங்கள்

நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும்பல

விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்

நற்றவ நடையினிலும்நல்

நாவலர் தேமொழித் தொடரினிலும்,

உற்றசெந் திருத்தாயைநித்தம்

உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;

கற்றபல் கலைகளெல்லாம்அவள்

கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us