Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : பிப் 28, 2020 01:10 PM


Google News
Latest Tamil News
பிப்.28, மாசி 16: காங்கேயநல்லுார் முருகன் சூரிய பிரபையில் பவனி, நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்ஸவம், மதுரை நன்மை தருவார், திருச்செந்துார், பெருவயல், திருப்போரூர், வள்ளிமலை, பைம்பொழில் முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

பிப்.29, மாசி 17: சஷ்டி விரதம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், தோளுக்கினியானில் பவனி, காங்கேயநல்லுார் முருகன் மயில் வாகனம், திருச்செந்துார் முருகன் சிங்க கேடய வாகனம், அம்மன் சப்பரம், பெருவயல் முருகன் ஆடு வாகனம், கரிநாள்.

மார்ச் 1, மாசி 18: கார்த்திகை விரதம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் பவனி, காங்கேயம் முருகன் பூத வாகனம், திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசக்காட்சி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருச்செந்துார் சுவாமி, அம்மன் தங்க முத்துக்கிடா வாகனம்.

மார்ச் 2, மாசி 19: காங்கேயம் முருகன் சஷே வாகனம், கோவை கோனியம்மன் வெள்ளி யானை வாகனம், காரமடை அரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம், வேதாரண்யம் சிவன், திருச்செந்துார் முருகன் தங்க முத்துக்கிடாவிலும், அம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

மார்ச் 3, மாசி 20: காங்கேயம் முருகன் - தெய்வானை திருக்கல்யாணம், நத்தம் மாரியம்மன் பால்குடம், கோவை கோனியம்மன் திருக்கல்யாணம், மதுரை நன்மை தருவார் பவனி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் பவனி, திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம்.

மார்ச் 4, மாசி 21: கோவை கோனியம்மன் தேர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கருட வாகனம், காரமடை அரங்கநாதர் அனுமன் வாகனம், திருச்செந்துார் முருகன் கோரதம், இரவு வெள்ளித்தேர், அம்மன் இந்திர விமானம், காங்கேயம் முருகன் யானை வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் தோளுக்கினியானில் பவனி.

மார்ச் 5, மாசி 22: முகூர்த்த நாள், வாஸ்து நாள், காங்கேயநல்லுார் முருகன் தேர், கோவை கோனியம்மன் பாரிவேட்டை, காரமடை அரங்கநாதர் கருட வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம், திருச்செந்துார் முருகன் சிவப்பு சாத்தும் காட்சி, குலசேகராழ்வார் திருநட்சத்திரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us