ADDED : ஜூலை 23, 2023 04:04 PM

எங்கும் நிறைந்த அருள்மணியே
ஏகமணியே ஒளிர்மணியே
இறையோன் இடத்தில் நடனமிடும்
இமைய மணியே நவமணியே
கங்குல் பகலும் கண்டவெளிக்
கலை நான்குடைய திருமணியே
கண்ணின் மணியே பொன்மணியே
கமலா சனத்தில் வளர்மணியே
தங்கும் அடியார் இதயமதில்
தழைத்த மணியே தவமணியே
தரணிக்கு ஒளியாய் இரவுபகல்
தானே வளர்ந்த தளிர்மணியே
மங்குங் கருத்தை நிலைநிறுத்தி
வதன வெளியில் படர்மணியே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
பார்வதிதேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலங்களில் ஒன்று மயிலாடுதுறை. கும்பகோணம் அருகிலுள்ள இத்தலத்தினை சமஸ்கிருதத்தில் மாயூரம் என்பர். ஆயிரமானாலும் மாயூரமாகாது என இதன் பெருமையை சொல்வர். இவ்வூருக்கு அருகில் உள்ள நல்லத்துக்குடி என்னும் ஊரில் வாழ்ந்தவர்
கிருஷ்ண அய்யர். தினந்தோறும் அர்த்தஜாம பூஜையை தரிசனம் செய்து வீட்டிற்கு திரும்புகையில் அம்பிகையின் அருளால் தீப்பந்தம் வழிகாட்டும் சிறப்பினை பெற்றவர். திருக்கடையூர் அபிராமி பட்டரை போல மாயூரத்திற்கு கிருஷ்ணபட்டர் என சொல்வர்.
இவர் எழுதிய அபயாம்பிகை சதகம் என்னும் நுால் அம்பிகையின் அருமை பெருமைகளை ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்கிறது. அம்பிகை சன்னதிகளில் மனமுருகி படிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்பாடலை படிப்பவர்கள் குடும்பத்தில் செல்வம் கொழிக்கும். வியாபாரத்தில் தடையில்லாத வருமானத்தை பெறுவர்.