Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

நால்வர் சிறப்பு சிவனடியார்கள்

ADDED : ஜூலை 23, 2023 04:06 PM


Google News
Latest Tamil News
தினமும் நீராடி திருநீறு தரிக்க வேண்டும். அரை நிமிடமாவது ஐந்தெழுத்து மந்திரத்தை மனதால் 108 தடவை ஜபிக்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டாலும் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அங்குள்ள கடவுளை வழிபட வேண்டும்.

இதை அப்படியே பின்பற்றி வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள்.

இவர்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் இந்த நான்கு பேரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் இவ்வுலகில் பிறக்கவில்லை என்றால் வேதம், திருநீறு, ஐந்தெழுத்து போன்றவற்றின் சிறப்புகள் தெரியாமலே போயிருக்கும் என ஒரு பாடல் விவரிக்கிறது.

இதோ அந்தபாடல்...

சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் நம்சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகரும் - முற்கோலில்

வந்திலரேல் நீறெங்கே மாமறை நுால்எங்கே

எந்தைபிரான் அஞ்செழுத்து எங்கே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us