ADDED : ஜூலை 21, 2015 12:06 PM

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்ற
ஆயகி கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
பொருள்: உலகின் தலைவியே! கலைமகளாகவும், அலைமகளாகவும் இருப்பவளே! பஞ்சபாணம் தாங்கியவளே! பார்வதியே! சம்ஹாரம் செய்பவளே! சிவபெருமானின் கழுத்தில் விஷத்தை நிறுத்தியவளே! மயக்கும் பேரழகு மிக்கவளே! சப்த மாதர்களில் வராகியாக
இருப்பவளே! சூலம் தாங்கியவளே! மதங்க முனிவரின் மகளே! பலவித திருநாமங்களால் போற்றப்படுபவளே! உன் திருவடி எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கட்டும்.
குறிப்பு: அபிராமி அந்தாதியிலுள்ள பாடல்.