Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : மார் 03, 2015 04:20 PM


Google News
Latest Tamil News
வடிவுடைவாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்

பொடியணி மேனி மூடவுரி கொண்டவன் புன்சடையான்

கொடிநெடு மாடமெங்குங் குழகன் குடமூக்கிடமா

இடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.


பொருள்: மேனி முழுவதும் திருநீறு அணிந்தவர் சிவன். அவர் ஒருமுறை யானையின் தோலை உரித்து வீரச்செயல் புரிந்ததைக் கண்டு, வாள் போன்ற கூரிய கண் கொண்ட பார்வதியே பயந்தாள். தேவர்கள் வணங்கும் அழகனான அவர் உயர்ந்த மாளிகை சூழ்ந்த

கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அந்தப் பெருமானை வணங்குகிறேன்.

குறிப்பு: இந்தப் பாடலை ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us