Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜூலை 21, 2015 12:19 PM


Google News
Latest Tamil News
* யோகா என்பதன் பொருள் என்ன?

எஸ்.ஸ்வேதா, மதுரை

யோகா என்பது 'அஷ்டாங்க யோகம்' என்னும் எட்டு படிநிலைகளைக் கொண்டது. இதில் ஆசனம் என்பதையே தற்போது யோகா என்று குறிப்பிடுகின்றனர். கீதையில் கிருஷ்ணர் இதன் பெருமையை அர்ஜூனனுக்கு உபதேசித்துள்ளார். 'யோகா' என்பதற்கு 'இணைதல்' என்பது பொருள். உடலையும், உள்ளத்தையும் இணைத்து சமநோக்கில் வாழச் செய்யும் யோகா படித்தால் மனிதன் மாமனிதனாக மாற முடியும்.



* கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் இருக்கிறதே. அந்தச்சிலைகள் அங்கு நிற்பதன் தத்துவம் என்ன?

கே.எல்.புனிதவதி, கோவை

அவை துவாரபாலகர் சிலைகள். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபு.

** அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்படி பெறலாம்?

எஸ்.பிரேமா, போடிநாயக்கனூர்

நம் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், மற்றவர்களும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். அதாவது நமக்கு கிடைத்திருப்பதைக் கொண்டு முதலில் நாம் திருப்தியடைய வேண்டும். பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை

கொள்வதோ, தாழ்ச்சி கண்டு கேலி செய்வதோ கூடாது. சுருக்கமாகச் சொன்னால் இறையருளால் நாம் நன்றாயிருக்கிறோம். நம்மைப் போல பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற கடவுளிடம் பிரார்த்திக்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்ல விஷயம் பேசும் போது தும்மினால் பிரச்னை வருமா?

அ.அனுஷா, மயிலாப்பூர்

தும்மல் வந்தால் யாரால் அடக்க முடியும்? நல்ல விஷயம் பேசும் போது மணி சத்தம் கேட்டால் சந்தோஷப்படுகிறோம். தும்மல் கேட்டால் சங்கடப்படுகிறோம். தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து பேசலாம்.

* கொடுத்த வாக்கை நிறைவேற்றாவிட்டால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது உண்மை தானா?

எம்.புஷ்பலதா, கடலூர்

உண்மை தான். வாக்கு கொடுத்ததை நம்பி ஏமாறுபவர்களின் வயிற்றெரிச்சல், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத சாபமாக மாறி விடும்.

* அமாவாசையன்று சமையலில் வாழைக்காயை ஏன் பயன்படுத்துகிறோம்?

ஆர்.மேகலா, சிதம்பரம்

அமாவாசையன்று சமைக்கும் சாப்பாட்டை நம் முன்னோர்களுக்கு அளிப்பதாக எண்ணி காக்கைக்கு வைக்கிறோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு மூன்றும் இடம் பெற வேண்டும். இவற்றில் முக்கியமானது வாழைக்காய். ஏனெனில் முன்னோர்

ஆசியால், நம் குலமும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us