Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : மார் 10, 2015 02:20 PM


Google News
Latest Tamil News
** சத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது?

எம். செல்லையா, சாத்தூர்

இரண்டும் சமமானது தான். ஆனால், சத்தியத்தைக் கடைபிடிப்பதும் ஒரு தர்மம் தான். பொய் பேசாததையே தர்மமாகக் கடைபிடித்த சத்தியவிரதன், அரிச்சந்திரன் போன்றோர் துன்பம் அனுபவித்தே வெற்றி பெற்றனர். தர்மம் சத்தியத்தில் அடங்கி விடுவதால் சத்தியமே வலிமையானது.



* கீழே கிடக்கும் மதிப்புள்ள பொருளை கோயில் உண்டியலில் செலுத்தி விடலாமா? அல்லது ஏழைகளுக்கு கொடுத்து விடலாமா?

ஜி.சக்தி, திருப்பூர்

உரியவர் யாரெனக் கண்டுபிடிக்க முடிந்தால் அவரிடம் ஒப்படையுங்கள். முடியாத பட்சத்தில் உண்டியலில் செலுத்தி விடுங்கள்.

* ராகுபகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாதா ஏன்?

ஜி.சீதாபதி, கடலூர்

ராகு மட்டுமில்லாமல் நவக்கிரகங்களையும் வழிபடலாம். கோயில்களில் நவக்கிரக சந்நிதியை வழிபடத் தானே செய்கிறோம். அசுரனாக இருந்தாலும், இறைவனை வழிபட்டே ராகுவும் கிரகபதவியை அடைந்தார். அந்த வகையில் அவரும் இறையடியார் தான்.

* மூழ்கிக் குளிக்க பயமாக உள்ளதால், புனித தீர்த்தங்களின் நீரை தலையில் தெளித்துக் கொள்கிறேன். இப்படி செய்யலாமா?

ஜி. இந்திரா, பெங்களூரு

மகாமக குளம் பற்றி ஒரு தகவல் உண்டு. இங்கே வந்த ஒரு பறவை தற்செயலாக குளத்து நீரில் இறகை நனைத்து விட்டு, ஒரு உதறு உதறியதாம். அந்த நீர்த்திவலை அவ்வழியே சென்ற ஒருவர் மீது பட்டு அவர் முக்தியே பெற்றாராம். நீங்கள் தலையிலேயே தெளித்துக் கொள்வதால் உங்களுக்கு ஏக புண்ணியம்!

* சிறிது கூட பயமின்றி அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்களே ஏன்?

சம்பத் ராதாகிருஷ்ணன், கோவை

எல்லாரும் செய்வதில்லை. சிலர் செய்கிறார்கள். இந்தப் பிறவியில் அதர்மம் செய்து பாவம் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் விதி. இதற்கான துன்பத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள். 'தவறு செய்யக்கூடாது' என்று சொன்னால், அவர்களின் புத்திக்கு

ஏறுவதில்லை. நல்லவர்கள் இறையருளால் தங்களை திருத்திக் கொள்கிறார்கள்.

* ராசிக்கல் மோதிரம் அணிவது ஏன்?

என்.பி.குமார், திண்டுக்கல்

மோதிரம் என்பது ஆபரணங்களில் ஒன்று. இது நமது சாத்திரங்களிலும் காணப்படுகிறது. ராசிக்கல் மோதிரம் என்பது ஜோதிட சம்பந்தமானது. முன்னேற்றம் வந்தால் அணிவதைத் தொடருங்கள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us