Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : நவ 03, 2023 11:24 AM


Google News
Latest Tamil News
 ஆர்.ரமா பிரபா, அலங்காநல்லுார், மதுரை.

*கனவுகளை பிறரிடம் சொல்லலாமா...

சொல்லக் கூடாது. மீறி நல்ல கனவை மற்றவர்களிடம் சொன்னால் பலிக்காது. கெட்ட கனவாக இருந்தால் நம் மதிப்பு குறையும்.

எஸ்.புனிதா, நெலமங்கலா, பெங்களூரு.

*ஊர் கூடி தேர் இழுப்பது போல என்கிறார்களே...

மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை இப்படி சொல்கிறார்கள். உடலாகிய தேரில் உயிர் என்னும் கடவுள் எழுந்தருளியிருக்கிறார் என்பதே இதன் தத்துவம்.

எம்.சங்கரி, மறைமலைநகர், செங்கல்பட்டு.

*பூஜையின் முடிவில் 'ஓம் சாந்தி' எனச் சொல்வது ஏன்?

மனஅமைதியே சாந்தி. கடவுள் அருளால் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பி.வினோதினி, திருவேங்கடம், திருநெல்வேலி.

*செய்யும் தர்மம் நம் சந்ததியைச் சேருமா?

செய்யும் தர்மம் நம் சந்ததியைக் காக்கும்.

டி.மகாராஜன், குடிமங்கலம், திருப்பூர்.

*புது மணப்பெண்ணிற்கு தாலி பிரித்துக் கட்டுவது அவசியமா?

திருமணமான மூன்று அல்லது ஐந்தாம் மாதத்தில் வரும் முகூர்த்த நாளில் சுமங்கலிகள் முன்னிலையில் இந்தச் சடங்கை நடத்துவர்.

எல்.நிவாசினி, ஜல்விஹார், டில்லி.

*அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளோம். புதுமனை புகுவிழா நடத்துவது எப்படி?

அருகிலுள்ள கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து தரை தளத்தில் கோபூஜையை நடத்துங்கள். பிறகு வீட்டின் நிலைக்கு பூஜை செய்து விட்டு கணபதி ஹோமத்தை நடத்துங்கள்.

ஜி.சுரேந்தர், பூதப்பாண்டி, கன்னியாகுமரி.

*உண்மையான வெற்றியை அடைவது எப்படி?

எல்லாம் கடவுளின் செயல் என நம்பி செயல்படுங்கள். போட்டி, பொறாமை இல்லாமல் மனத்துாய்மையுடன் வாழ்வதே உண்மையான வெற்றி.

வி.ஆர்த்தி, கடமலைக்குண்டு, தேனி.

*நிர்வாகத்தை திறம்பட நடத்த பரிகாரம் சொல்லுங்கள்?

தேவ கணங்களை திறம்பட நிர்வகிப்பதால் விநாயகருக்கு 'கணநாதர்' என்று பெயர்.

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப!

நிர்விக்னம் குருமே தேவ

ஸர்வ கார்யேஷு ஸர்வதா!!

என்னும் மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லுங்கள்.

பி.ஆனந்தி, பிராட்வே, சென்னை.

*லட்சார்ச்சனை என்பதன் பொருள் என்ன?

ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரம் திருநாமம்(பெயர்) உண்டு. இதை சொல்லி அர்ச்சனை செய்வது சகஸ்ர நாமம். இதை நுாறு முறை செய்தால் லட்சார்ச்சனை.

ஆர்.ராமு, வானுார், விழுப்புரம்.

*பெற்றோரின் சமாதியை பராமரிக்காவிட்டால் தோஷம் ஏற்படுமா?

பிதுர் தோஷம் ஏற்படும். ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us