Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நீ எதிர் வந்தால்... எதிர்காலம் துலங்கும்

நீ எதிர் வந்தால்... எதிர்காலம் துலங்கும்

நீ எதிர் வந்தால்... எதிர்காலம் துலங்கும்

நீ எதிர் வந்தால்... எதிர்காலம் துலங்கும்

ADDED : அக் 27, 2023 11:33 AM


Google News
Latest Tamil News
கோமாதா எனப்படும் பசுவை வணங்கினாலும், உணவு கொடுத்தாலும், எதிரே வந்தாலும் நன்மை உண்டு.

* ஒரு முறை வலம் வந்தால் உலகத்தை சுற்றிய புண்ணியம் கிடைக்கும்.

* பூஜை செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை வணங்கிய பலன் உண்டு.

* புல், பழம், அகத்திக்கீரை கொடுத்தால் பாவம் தீரும்.

* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் மாலைப்பொழுது கோதுாளி லக்னம் எனப்படும். இந்த நேரம் மஹாலட்சுமி வரும் நேரமாகும். அப்போது அவற்றின் குளம்படியில் இருந்து கிளம்பும் புழுதி, நமது உடலில் பட்டால் புண்ணிய ஸ்நானம் செய்ததற்கு சமம். இந்த துாசியை எடுத்து பூசிக்கொண்ட அரசர்கள் ரகு, தசரதர்.

* 'மா' என பசு கத்தும் ஓசை மங்களத்தை தரும்.

* பசு இருக்கும் இடத்தில் மந்திர ஜபம், தர்ம செயல்களை செய்தால் நுாறு பங்கு பலன் கிடைக்கும்.

* எமதுாதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள்.

* பூமியில் பசுதானம் செய்த ஜீவன்கள் இறந்த பிறகு பரலோகத்திற்கு செல்லும்போது வைதரணிய என்னும் நதியை எளிதாக கடக்கும்.

* பசு இருக்கும் இடத்தை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us