ADDED : செப் 10, 2023 05:38 PM

பி.காவ்யா, நெலமங்கலா, பெங்களூரு.
*நினைவாற்றல் பெருக யாரை வழிபடலாம்?
யாதேவீ சர்வபூதேஷு
ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோநம:
என்னும் ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள்.
கே.ராஜேஸ்வரி, திருநாவலுார், கள்ளக்குறிச்சி.
*எருமை சாணத்தால் வாசல் தெளிக்கலாமா?
தெளிக்கக் கூடாது. தெய்வீகமானதும், கிருமி நாசினியுமான பசுவின் சாணத்தால் வாசல் தெளியுங்கள்.
எம்.பிரசன்னகுமார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
*நவக்கிரக சன்னதியில் முதலில் யாரை வழிபட வேண்டும்?
முதலில் சூரியனை வழிபட வேண்டும். பின் இடமிருந்து வலமாக மற்ற கிரகங்களை சுற்றி வர வேண்டும்.
எம்.பவித்ரன், மல்லாங்கிணறு, விருதுநகர்.
*பக்தருக்கான பண்புகள் என்னென்ன?
கோயிலில் தொண்டு செய்தல், பிறரைக் குறை கூறாதிருத்தல், பொறுமை, பணிவுடன் நடத்தல், சுயநலமின்மை, இனிமையாக பழகுதல்.
கே.பரத், சிறுமுகை, கோயம்புத்துார்.
*காலையில் குளிக்க ஏற்ற நேரம் எது?
சூரிய உதயத்திற்கு முன் குளித்தால் புண்ணியம் சேரும். அதிகாலை எழுவதால் மனமும், உடலும் நலம் பெறும்.
கே.ரங்கராஜ், மணிமுத்தாறு, திருநெல்வேலி.
*ஐஸ்வர்யம் என்பதன் பொருள் என்ன?
ஐஸ்வர்யம் என்பது செல்வம். இதன் அதிபதியான மகாலட்சுமியை வழிபட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
கே.சரணவன், சாந்தினிசவுக், டில்லி.
*நந்தி மகன்தனை என்பது யாரைக் குறிக்கும்?
நந்தி - சிவன்,
நந்தி மகன்தனை - விநாயகரைக் குறிக்கும்.
எம்.மணிகண்டன், திருவட்டாறு, கன்னியாகுமரி.
*யாரைக் கண்டு பயப்பட வேண்டும்?
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவரைக் கண்டால் பயப்பட வேண்டும்.
சி.எல்.குமார், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*கடவுளை கை கூப்பி வணங்கினால் போதுமா...
வணங்குவதில் மூன்று வகையுண்டு. கை கூப்புதல், தலை தாழ்த்தி வணங்குதல், தரையில் விழுந்து வணங்குதல். இந்த மூன்றையும் செய்வது நல்லது.
எல்.சுப்பிரமணியன், உசிலம்பட்டி, மதுரை.
*இறப்பு வீடுகளில் திருவாசகம் படிக்கலாமா?
சிவபெருமானின் மறுவடிவம் திருவாசகம். இதை இறப்பு வீட்டில் படித்தால் அந்த ஆன்மா சிவபெருமானின் திருவடியை அடையும்.