Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜன 10, 2020 09:33 AM


Google News
Latest Tamil News
* வெளியே கிளம்ப வேண்டியிருந்தால் ஏற்றிய தீபத்தை சீக்கிரம் அணைக்கலாமா?

வி.ஷைனிகா, கடலுார்

வருவதற்குள் எண்ணெய் தீர்ந்து திரி கருகி விடும் என்ற சூழலில் அணைத்து விட்டுச் செல்வதில் தவறில்லை. அதற்காக எல்லா நாட்களிலும் இப்படி செய்யக்கூடாது.

* சிலர் வில்வக்காயை வழிபடுகிறார்களே...ஏன்?

ஜி.பிரகாஷினி, சென்னை

காயை வழிபடுவதில்லை. வில்வம் பழத்தை மகாலட்சுமியாக கருதுவதால், வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் வைத்து வழிபட பணத்தட்டுப்பாடு, கடன் தொல்லை, வறுமை தீரும்.

* பல்லி நம் உடம்பில் விழுந்தால் துன்பம் ஏற்படுமா?

எல்.ஷப்னா, தேனி

உடம்பில் எந்த உறுப்பின் மீது விழுகிறதோ அதை பொறுத்து பலன் அமையும். அது நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கலாம். காலண்டர் அல்லது பஞ்சாங்கத்தில் இதற்குரிய பலன் இருக்கும்.

நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

வி.அட்சயா, கோவை

நெல்லிமரத்தை வீ்ட்டில் வளர்ப்பதில்லை. தனியாக தோட்டத்தில் வளர்க்கலாம்.

நான்கு தலைமுறைக்கும் மேலாக ஒரே வீட்டில் இருக்கலாமா?

பி.ஸ்வேதா, மதுரை

எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் ஒரே வீட்டில் இருக்கலாம். இதனை 'ராசியான வீடு' எனச் சொல்வர். முன்னோர்களின் ஆசியால் நலமுடன் வாழ்வர்.

கொடிமரம் இருக்கும் கோயில், இல்லாத கோயில் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பி.கவுதம், திருவள்ளூர்

வழிபாடு, நித்ய பூஜையில் வித்தியாசம் கிடையாது. ஆனால் கொடிமரம் இருக்கும் கோயில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவர்.

* சுவாமியின் வேலில் எலுமிச்சம்பழம் குத்துவதும், மாலை சாத்துவதும் ஏன்?

பி.விநாயக் ராம், ஊட்டி

எதிரி தொல்லை, திருஷ்டி நீங்குவதற்கு இப்படி செய்கின்றனர். எலுமிச்சை மாலையை சுவாமிக்கு சாத்தி வழிபட தடைகள் நீங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us