Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : மே 19, 2019 08:20 AM


Google News
Latest Tamil News
* ஆதீனம், துறவிகள் பெயரின் முன் 'ஸ்ரீலஸ்ரீ' என சேர்ப்பது ஏன்?

எஸ்.ஆர்.வர்தனி, பரமக்குடி

'ஒரு லட்சம் ஸ்ரீ' என்பதன் சுருக்கம் இது. அதாவது 'ஸ்ரீ'... முதல் 'லட்சம் ஸ்ரீ'க்களுக்கு உரியவர் என்பது இதன் பொருள்.



சனிதிசை நடப்பவர்கள் திருநள்ளாறு செல்வது கட்டாயமா?

என்.அமிர்தவல்லி, திருப்பூர்

ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி, சனிதிசை காலங்களில் கெடுபலனைக் குறைக்க திருநள்ளாறு வழிபாடு உதவும்.

* களத்திர தோஷம் தீர வழியுண்டா?

சு.செண்பகம், சங்கராபுரம்

களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். களத்திர தோஷத்தால் குடும்ப வாழ்வில் பிரச்னை உருவாகும். இதை தவிர்க்க, தோஷமுள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது நல்லது.

நவக்கிரக சாந்தி ஹோமம், வாழை மரத் திருமணம் செய்தால் பாதிப்பு குறையும். தஞ்சாவூர் மாவட்டம் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமியை தரிசியுங்கள்.



விளக்கேற்ற எந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம்?

பா.சின்மயானந்தம், மதுரை

நல்லெண்ணெய், நெய் இரண்டும் ஏற்றவை. இதை 'தைல தீபம், ஆஜ்ய தீபம்' என சொல்வர்.



இரண்டு அமாவாசை, கார்த்திகை ஒரே மாதத்தில் வந்தால், விரதமிருக்க ஏற்றது எது?

என்.காசி, திண்டிவனம்

இரண்டிலும் விரதமிருப்பது அவசியம்.

ராகு, கேது தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்கள்

என்.ஜோதி பார்வதி, மதுரை

ராகு தோஷம் அகல வெள்ளிக்கிழமை காலை 10:30 - 12:00 மணிக்குள் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். கேது தோஷத்திற்கு சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us