Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கலைமகளே வருக... கருணை மழை பொழிக

கலைமகளே வருக... கருணை மழை பொழிக

கலைமகளே வருக... கருணை மழை பொழிக

கலைமகளே வருக... கருணை மழை பொழிக

ADDED : அக் 20, 2023 05:33 PM


Google News
Latest Tamil News
குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட பாடல்களை கற்றுக் கொடுங்கள் அருளைப் பெறுவீர்கள்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்

கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்

பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்

பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.

- ஞானக்கூத்தர்

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி

பூண்டு

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -

வெள்ளை

அரியா சனத்தில் அரசரோடு என்னை

சரியா சனம்வைத் தாய்.

- காளமேகப்புலவர்

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே

ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே

கோக்கும் தமிழ் கொத்து அனைத்தும் வாழியே

கூத்தன் கவிச்சக்கரவர்த்தி வாழியே

- ஒட்டக்கூத்தர்

கலைபயின்ற உளத்தினுக்கும் கரும்பினை

முக்கனியை அருட்கலை ஓங்கும்

நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த

நான்முகனார் நீண்ட நாவின்

தலைபயின்ற மறைபயின்று மூவுலகும்

காக்கின்ற தாயை வாகைச்

சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி

அம்மையை நாம் சிந்திப்போமே

- வள்ளலார்

வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்

உள்ள தாம் பொருள் தேடி உணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத்துள் உட்பொருள் ஆவாள்

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us