Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஜூன் 21, 2024 01:04 PM


Google News
* விநாயகரை வழிபட்டு செயலைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.

* புனித தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் தீரும்.

* ஆழ்வார்களால் பாடப்பட்ட கோயில்களை 'மங்களாசாசனம் செய்யப்பட்டவை' என்பர்.

* நம்மாழ்வாரை குருவாக கொண்டவர் மதுரகவியாழ்வார்.

* மனிதர்களை மணம் புரிய மாட்டேன்; கண்ணனே என் கணவன் என வாழ்ந்தவர் ஆண்டாள்.

* ஒரு லிங்கத்திற்குள் 1000 லிங்கம் இருப்பதற்கு 'சகஸ்ர லிங்கம்' என்று பெயர்.

* மதுரையில் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார்.

* இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் மந்திரத்தை ஜபித்த நாயன்மார் ருத்ர பசுபதியார்.

* ஸ்ரீராமர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் குலசேகராழ்வார். இவர் சேர நாட்டின் மன்னர்.

* வேத வாக்கியமே மந்திரமாகும். இதற்கு 'ஆற்றல் நிறைந்த சொல்' என பொருள்.

* யோகாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் பதஞ்சலி முனிவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us