Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பலன் தரும் விரதங்கள்

பலன் தரும் விரதங்கள்

பலன் தரும் விரதங்கள்

பலன் தரும் விரதங்கள்

ADDED : மே 31, 2024 10:42 AM


Google News
Latest Tamil News
கீழே உள்ள விரதங்களை தொடர்ந்து கடைபிடியுங்கள்.

* 11 சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தடைகள் விலகி மனவலிமை அதிகரிக்கும்.

* 11 வாரம் முருகனை வழிபட்டு வெள்ளி அன்று விரதமிருக்க இழந்த சொத்து, பணம், பதவி கிடைக்கும்.

* 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* ஐப்பசியில் கந்தசஷ்டி விரதம் (6 நாள்) இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

* சனிப் பிரதோஷ விரதமிருந்தால் சிவன் கோயிலை ஐந்தாண்டு தரிசித்த பலன் கிடைக்கும்.

* 24 ஆண்டுகள் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* மாதந்தோறும் மூன்றாம் பிறையை (சந்திர தரிசனம்) பார்த்தால் சிவனருள் கிடைக்கும்.

* 9 ஆண்டு நவராத்திரி விரதமிருந்தால் அம்பிகையின் அருளால் நினைத்தது நிறைவேறும்.

* ஆனி வளர்பிறை ஏகாதசியன்று தண்ணீர் பருகாமல் விரதமிருப்பவர்கள் திருமாலின் திருவடியை அடைவர். ஓராண்டு ஏகாதசி விரதமிருந்த பலனை தரும்.

* கும்பாபிஷேகத்தை தரிசித்தால் கோயிலை ஓராண்டு தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us