Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : மே 10, 2024 11:58 AM


Google News
Latest Tamil News
*மகாலட்சுமியின் அருள் பெற தகுதிகள் என்ன?

இ.பவித்ரா, ஐ.டி.பார்க், டில்லி.

உண்மை, பக்தி, உதவும் குணம் கொண்டவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

*முக்கிய நிகழ்வின் போது பெரியவர்களிடம் திருநீறு வாங்குவது ஏன்?

எம்.ஜனனி, ராமநாதபுரம், கோவை.

பெரியவர்களிடம் ஆசி பெற்று, திருநீறு பூசிக் கொண்டால் வெற்றி கிடைக்கும்.

*பூஜையறையில் எந்த திசை நோக்கி குபேரர் இருக்க வேண்டும்?

எஸ்.ஆருத்ரா, பல்லாவரம், சென்னை.

பூஜையறையில் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

*நுாறாண்டு வாழ்க என வாழ்த்துவது ஏன்?

ஜே.காவ்யா, குஜிலியம்பாறை, திண்டுக்கல்.

'சதாயு புருஷ:' என வேதம் நம்மை வாழ்த்துகிறது. இதன் அடிப்படையில் தான் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர்.

*அஷ்ட ஐஸ்வர்யம் என்பது என்ன?

கே.ஜன்விகா, பூவரசன்குப்பம், விழுப்புரம்.

உடல்நலம், செல்வாக்கு, ஆளுமைத்திறன், உறவினர், தங்கம், நவரத்தினம், செல்வம், பணியாளர்கள் ஆகியன அஷ்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள்).

*அப்பிரதட்சிணம் (வலமிருந்து இடமாக சுற்றுதல்) செய்தால் பலன் கிடைக்குமா?

ஏ.சஞ்சீவ், சுரண்டை, தென்காசி.

பிரதோஷத்தன்று (மாலை 4:30 - 6:00 மணி) வலமிருந்து இடமாக சுற்றலாம். மற்ற நேரத்தில் சுற்றக் கூடாது.

*அட்சய திரிதியை அன்று தென்னங்கன்றை தானம் செய்யலாமா?

பி.சிவதர்ஷன், சோழவந்தான், மதுரை.

செய்யலாம். முடிந்தால் உணவு, உடை, பண உதவி செய்யுங்கள்.

*அருளாளர்கள் தன்னை தாழ்வாக கருதுவது ஏன்?

எம்.அபிநந்திகா, திருத்தணி, திருவள்ளூர்.

தங்களைத் தாழ்வாக கருதுபவரே அருளாளர். மாணிக்கவாசகர், 'நாயிற் கடையாய் கிடந்த அடியேன்' என திருவாசகத்தில் பாடியுள்ளார்.

*பல்லி சொல்லும் பலன் யாது?

சி.தனமிதுன், திருவட்டாறு, கன்னியாகுமரி.

நல்ல விஷயத்தை பேசும் போது பல்லி சத்தமிட்டால் அது நிறைவேறும்.

*குபேரனின் வாகனம் என்ன?

டி.ரியாஸ்ரீ, சிவாஜிநகர், பெங்களூரு.

பூதகணம். இறந்த ஆன்மாக்களுக்கு இன்பம் தருபவர் குபேரன். அதனால் இவர் மனிதனை வாகனமாக (நரவாகனம்) கொண்டிருக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us