Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஏப் 26, 2024 01:32 PM


Google News
Latest Tamil News
*வியாபாரம் செழிக்க எந்த நாளில் குலதெய்வத்தை வழிபட வேண்டும்?

கே.பூமிகா, திருமாணிகுழி, கடலுார்.

ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை 6:00 - 7:00 மணிக்குள்) வழிபட்டால் வியாபாரம் செழிக்கும்.

*வில்வக்காயை வீட்டில் வழிபடலாமா...

எம்.கோபி, ஐ.டி.ஐ., பெங்களூரு.

வில்வம் பழத்தை மகாலட்சுமியாக கருதி வீட்டில் வழிபடலாம். இதனால் பணத்தட்டுப்பாடு, கடன்பிரச்னை மறையும்.

*கோயிலில் உச்சிக்கால பூஜையை தரிசித்தால் என்ன கிடைக்கும்?

கே.அருண், கீர்த்திநகர், டில்லி.

நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் கிடைக்கும்.

*போலியான செயல்களை கவுரவத்திற்காக செய்கிறோமே சரியா...

பி.ரஞ்சனி, சோழவந்தான், மதுரை.

சரியில்லை. நேர்மையாக இருந்தால் உண்மையான கவுரவம் தேடி வரும்

*துறவிகளை, 'பூஜ்யஸ்ரீ' என அழைப்பது ஏன்?

எஸ்.அகிலேஷ், சமத்துார், கோயம்புத்துார்.

பணம், புகழ், பட்டம், பதவி என ஆசைப்படாமல் வாழும் துறவியரை 'பூஜ்யஸ்ரீ' என அழைக்கிறோம்.

*ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்கிறார்களே...

வி.மீனாட்சி, கடையம், தென்காசி.

நல்ல சொற்களால் நன்மையும், கெட்ட சொற்களால் தீமையும் உண்டாகும் என்பது இதன் பொருள்.

*வாஸ்து நேரத்தில் எப்போது பூமிபூஜை நடத்த வேண்டும்?

சி.லதா, கோவிந்தவாடி, காஞ்சிபுரம்.

வாஸ்து நேரம் 90 நிமிடம். அதை ஐந்தாகப் பிரித்து கடைசி பகுதியான 18 நிமிடத்தில் பூமி பூஜை நடத்த வேண்டும்.

*திருஷ்டி சுற்றுவது ஏன்?

எஸ்.ரமணி, வடமதுரை, திண்டுக்கல்.

கெட்ட சக்திகளால் தீங்கு நேராமல் இருக்க திருஷ்டி சுற்றுகிறோம்.

*நெடுஞ்சாண் கிடை என்றால் என்ன?

எல்.சரவணன், அருமனை, கன்னியாகுமரி.

கோயிலில் வழிபாட்டிற்குப் பின், கொடி மரத்தின் முன் முழு உடம்பும் தரையில் படும்படி விழுந்து வணங்குவது நெடுஞ்சாண் கிடை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us