Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : பிப் 23, 2024 11:14 AM


Google News
Latest Tamil News
எம்.பிருந்தா, கோவில்பட்டி, துாத்துக்குடி.

*கும்பகோணத்தை 'குடமூக்கு' என்பது ஏன்?

பிரளயம் முடிந்ததும் மீண்டும் உலகைப் படைக்க அமுத கலசத்தை அம்பெய்து உடைத்தார் சிவன். அக்குடத்தின் மூக்குப்பகுதி விழுந்த இடமே 'குடமூக்கு' என்னும் கும்பகோணம். இங்கு சிவன் அருள்புரிகிறார்.

கே.ஷிவானி, மடிவாலா, பெங்களூரு.

*மாசிமகம், மகாமகம் இரண்டும் ஒன்றா...

இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மாசியில் வருவது மாசிமகம். 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்ப ராசியில் குருபகவான் தங்கும் போது வருவது மகாமகம்.

வி.பிரணவ், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்.

*சப்தரிஷிகளின் பெயர்கள் என்னென்ன?

சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், கபிலர், ரிபு, பஞ்சசிகர்

கே.அபிராமி, சின்னமனுார், தேனி.

*மாசிமகத்தில் புனித நதியில் நீராடுவது அவசியமா...

சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமுதம் சிந்திய இடம் மகாமகக்குளம். மாசிமகத்தன்று எல்லா நதிகளும் இங்கு நீராடி புனிதம் அடைவதால் நாமும் நீராடுவது அவசியம்.

எம்.ஆர்த்தி, பல்லடம், திருப்பூர்.

*சஞ்சீவி ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வழிபடலாமா...

சஞ்சீவி ஆஞ்சநேயர், பட்டாபிேஷக ராமர், தாண்டவமாடும் நடராஜர், குழலுாதும் கிருஷ்ணர், பத்ரகாளி படங்களை வீட்டில் வழிபடலாம்.

பி.ஸ்ரீதேவி, களியக்காவிளை, கன்னியாகுமரி.

*உறியடி உற்ஸவம் நடத்துவது ஏன்?

கடவுள் அருளால் தடைகளை தகர்த்து, குறிக்கோளை அடைய வேண்டும் என உணர்த்துவது உறியடி உற்ஸவம்.

எல்.வைதேகி, கருவடிப்பாளையம், புதுச்சேரி.

*மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்கிறார்களே...

தட்சன் மகளாக பார்வதி அவதரித்தது மாசிமகத்தில் தான். அவளே ராஜ ராஜேஸ்வரியாக உலகை ஆள்கிறாள். அதனால் இந்த பழமொழி உண்டானது. குடும்ப நிர்வாகத்தை நடத்துவதும் ஜெகத்தை ஆள்வது போலத்தான்.

எம்.ராகவன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

*சிலர் விளம்பர நோக்கில் சேவையில் ஈடுபடுகிறார்களே...

விளம்பரம் இன்றி தொண்டு செய்பவரை கடவுளே பெருமைப்படுத்துவார். ஆனால் விளம்பர நோக்குடன் சேவையில் ஈடுபடக் கூடாது

சி.சசிதரன், கல்யாண்புரி, டில்லி.

*கம்ப சூத்திரம் என்றால் என்ன?

கம்பரின் ராமாயணப் பாடல்கள் நயம் மிக்கவை. சிறப்பு பாடமாகத் தமிழை படிப்பவர்களுக்கு அதில் இருந்து விசேஷ பயிற்சி கொடுப்பர். அந்த பாடல்களுக்கு 'கம்ப சூத்திரம்' என்று பெயர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us