Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வரம் தர வருவாய் வீரபத்திரா!

வரம் தர வருவாய் வீரபத்திரா!

வரம் தர வருவாய் வீரபத்திரா!

வரம் தர வருவாய் வீரபத்திரா!

ADDED : பிப் 19, 2024 01:51 PM


Google News
Latest Tamil News
ஆவுடையான் தந்த அருளே போற்றி

இழிந்த யாகத்தை இடறினாய் போற்றி

ஈசன் மகனே இறைவா போற்றி

உருத்திரன் சேவகன் ஆனாய் போற்றி

உள்ளம் அமரும் உத்தமா போற்றி

ஊக்கமும் அருளும் தருவாய் போற்றி

எட்டுக் கைகள் உடையாய் போற்றி

ஏறு ஊர்தியான் செல்வனே போற்றி

ஐயன் ஆணை முடித்தாய் போற்றி

ஒப்புமை இல்லா அழகனே போற்றி

சிவனார் சிகையில் வந்தாய் போற்றி

சீலம் அளித்துக் காப்பாய் போற்றி

தும்பை சூட அதிர வருவாய் போற்றி

பகைவரை பறக்க செய்வாய் போற்றி

வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றி

அரக்கர் படை ஓடச் செய்தாய் போற்றி

கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றி

பைரவர் துணை கொண்டாய் போற்றி

பாங்காய் வெற்றியடைந்தாய் போற்றி

திசையெலாம் வெற்றி பெற்றாய் போற்றி

பகனின் கண்ணைப் பறித்தாய் போற்றி

பகலவன் பற்கள் பறித்தாய் போற்றி

கதிர் ஒளி இழக்கச் செய்தாய் போற்றி

சந்திரனைக் காலால் தேய்த்தாய் போற்றி

அக்னி நாவை அறுத்தாய் போற்றி

அவனது தடக்கை தறித்தாய் போற்றி

அமரர் வாழ்வை முடித்தாய் போற்றி

வசிட்டர் காமதேனு பறித்தாய் போற்றி

குறுமுனி குகையில் அடைத்தாய் போற்றி

அமரர் ஆணவம் அழித்தாய் போற்றி

எமனின் வாகனம் பற்றினாய் போற்றி

ஏகன் பணியை முடித்தாய் போற்றி

எமனின் கொடியைப் பற்றியவா போற்றி

வருணன் தடக்கை பிணைத்தாய் போற்றி

மலைகளைத் தகர்த்த மன்னவா போற்றி

விருட்சப் படையை அடக்கியவா போற்றி

முனிவர் வெருவ முடித்தாய் போற்றி

முன்வினை பாவம் தீர்த்தாய் போற்றி

வேதியரை ஒளியச் செய்தாய் போற்றி

தக்கன் தலையை அறுத்தாய் போற்றி

தகரின் தலையை அளித்தாய் போற்றி

தமருகன் தந்த தனயனே போற்றி

தக்கன் செருக்கை அழித்தாய் போற்றி

தாட்சாயணி சாபம் முடித்தாய் போற்றி

காளியை துணை கொண்டாய் போற்றி

காக்கும் காவல் தெய்வமே போற்றி

வேள்வியை அழித்த வெவ்வுருவே போற்றி

தோல்வி அறியாத் துாயவரே போற்றி

அட்டமா ஆயுதம் ஏந்தினாய் போற்றி

இட்ட பணியை முடித்தாய் போற்றி

தண்டமிழ் போற்றும் தலைவா போற்றி

தனித்து கோயில் கொண்டாய் போற்றி

தரணி எங்கும் நிறைந்தாய் போற்றி

தமிழர் வாழ்வைக் காப்பாய் போற்றி

ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய் போற்றி

கர்நாடகத்தில் கவினுற இருந்தாய் போற்றி

கேரளத்தில் கோயில் கொண்டாய் போற்றி

பர்வத மலையுறை பாலகா போற்றி!

காஷ்மீரத்தில் உறைந்தாய் போற்றி

பேசும் தெய்வம் ஆனாய் போற்றி

தேவாரப் பண்ணில் ஒளிர்ந்தாய் போற்றி

திருவாசக உந்தியில் அமர்ந்தாய் போற்றி

வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய் போற்றி

நாட்டுப்புற பாடலில் மிளிர்ந்தாய் போற்றி

சிவனின் திருஉரு பெற்றாய் போற்றி

தீமைகளை அழித்தொழிப்பாய் போற்றி

சூலம் ஏந்திட வந்தாய் போற்றி

பகைவரை ஒடச் செய்தாய் போற்றி

அதட்டொலி செய்த அற்புதா போற்றி

ஆசறு ஆதி வானவனே போற்றி

வாழ்வு தரும் வீரபத்ரா போற்றி

சினத்தீயின் வெம்மையே போற்றி

சிந்தனையில் நிறைந்த சிவனே போற்றி

சிவனின் தோற்றம் கொண்டாய் போற்றி

சீராய் வினைகள் முடித்தாய் போற்றி

அல்லோரை அழித்து ஒழிப்பாய் போற்றி

நல்லோரை வாழ வைப்பாய் போற்றி

கவலை தீர்த்து அருள்வாய் போற்றி

கருவைக் காத்து நிற்பாய் போற்றி

காலம் தோறும் சிறப்பாய் போற்றி

கணபதியின் இனிய சோதரா போற்றி

முருகனுக்கு மூத்த முதல்வனே போற்றி

அருள்மிகு வீரபத்ர தெய்வமே போற்றி

அருட்பெருங் கடவுள் ஆனாய் போற்றி

வினைகள் அறுக்கும் வீரனே போற்றி

வீரத்தை வழங்கும் வித்தகா போற்றி

நித்தம் அருளைப் பொழிவாய் போற்றி

உன்னத வாழ்வு அளிப்பாய் போற்றி

காவல் தெய்வம் ஆனாய் போற்றி

சைவம் தழைக்கச் செய்தாய் போற்றி

செம்பொற் கழலடி செல்வா போற்றி

வம்சம் செழிக்கச் செய்வாய் போற்றி

வளமான வாழ்வு அளிப்பாய் போற்றி

நாமகள் நாசியை அரிந்தாய் போற்றி

நானிலம் சிறக்கச் செய்வாய் போற்றி

திண்மை நிறைந்த தோளாய் போற்றி

தீமை மனத்தைத் தீய்ப்பாய் போற்றி

உலகம் உய்யச் செய்வாய் போற்றி

உத்தமத் தெய்வமே பத்திரா போற்றி

ஆசறு ஆதி வானவனே போற்றி

ஆற்றல் மிக்க ஆடலரசே போற்றி

தேவரை விரட்டிய தேவரே போற்றி

தேயமெலாம் போற்றும் வீரரே போற்றி

மாண்டவர்க்கு உயிர் கொடுத்தாய் போற்றி

மீண்டும் போரிட்ட புத்திரா போற்றி

மங்கையர் மாங்கல்யம் காப்பாய் போற்றி

மாண்புறு தெய்வமாய் ஆனாய் போற்றி

போற்றி போற்றி வீரபத்திரரே போற்றி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us