Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : நவ 24, 2023 09:12 AM


Google News
Latest Tamil News
கே.ஆர்.பிருந்தா, பிராட்வே, சென்னை.

*தீபாவளிக்கும் திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?

இரண்டுமே தீபத்தை போற்றும் விழாக்கள். தீபாவளி முதல் திருக்கார்த்திகை வரை தினமும் விளக்கேற்றி குபேர லட்சுமியை வழிபடுவது நல்லது.

சி.ஆர்த்தி, கும்முடிப்பூண்டி, திருவள்ளூர்.

*முதன் முதலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றியது யார்? ஏன்?

முதன்முதலில் ஏற்றியவள் பார்வதி. தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பெற்றதற்காக திருக்கார்த்திகையன்று தீபமேற்றினாள்.

வி.சந்தோஷ், தொட்டபள்ளாபுரா, பெங்களூரு.

*திருவண்ணாமலையின் சமீபகால ஞானிகள் யார்?

ரமணர், யோகிராம் சுரத்குமார் ஆகியோர்.

கே.புனிதவதி, நிலக்கோட்டை, திண்டுக்கல்.

*தீபமங்கள ஜோதி நமோநம என பாடியவர் யார்?

பழநி திருப்புகழில் அருணகிரிநாதர் இப்படி முருகனைப் பாடியுள்ளார்.

ஆர்.ராஜாமணி, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.

*திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?

தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பார்வதி பெற்றதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதிவடிவில் சிவனை தரிசித்ததும் திருக்கார்த்திகையன்று தான். இதனால் அண்ணாமலையாரை வழிபடுகிறோம்.

கே.பிரவின், ரஜோரி கார்டன், டில்லி.

*கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

சொக்கப்பனை என்றால் 'சொக்க வைக்கும் அழகு'. ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சியளித்ததை கொண்டாடும் விதமாக பனை மட்டை, தென்னங்கீற்றுகளை குவித்து வைத்து கொளுத்துகிறோம்.

ஜி.மீனா, விளாத்திகுளம், துாத்துக்குடி.

*பூஜையின் போது சொல்ல முருகன் ஸ்லோகம் சொல்லுங்கள்.

கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

“உமா கோமள ஹஸ்தாப்யாம்

ஸம்பாவித லலாடகம்

ஹிரண்ய குண்டலம் வந்தே

குமாரம் புஷ்கரஸ்ரஜம்”

ஆர்.கோகிலா, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.

*திருக்கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்களை ஏற்றினாலும் ஒளி குறையாது. அது போல உயிர்களுக்கு எல்லாம் அருளை வழங்கினாலும் கடவுள் எப்போதும் முழுமையாக இருப்பவர் என்பதை தீபம் உணர்த்துகிறது.

எல்.சிவனேசன், காட்டுமன்னார்கோவில், கடலுார்.

*செம்பொருள் என்னும் சொல் முருகனைக் குறிக்குமா?

முருகு என்பதற்கு அழகு, இளமை, செம்மை எனப் பொருள். இதனால் இச்சொல் முருகனைக் குறிக்கும்.

எல்.மீனாட்சி, உச்சிப்புளி, ராமநாதபுரம்.

*இல்லக விளக்கு என்றால் என்ன.

ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us