Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : செப் 27, 2024 12:29 PM


Google News
Latest Tamil News
* சியாமளா தண்டகம் என்னும் பாடலை பாடியவர் மகாகவி காளிதாசர். இவருக்கு கவி பாடும் சக்தியைக் கொடுத்தவள் உஜ்ஜயினி காளி.

* நவராத்திரியின் போது மூன்று தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி நம் வீடுகளில் எழுந்தருள்கின்றனர்.

* வள்ளலாருக்கு அவரது அண்ணியின் வடிவில் வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.

* நமக்கு தேவையானதை தந்தையிடம் கேட்கும் முன் தாயிடம் கேட்போம் அல்லவா... அது போல் நவராத்திரியில் நம் கோரிக்கைகளை அம்பிகையிடம் வேண்டுவது சிறப்பு.

* மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்.

* சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை 'ராஜமாதங்கி சியாமளா பீடம்' என அழைக்கிறோம்.

* மும்பையில் உள்ள 'மும்பாதேவியே' அந்த ஊருக்கு பெயர் வரக் காரணமானவள்.

* நவராத்திரியின் போது அம்மன் கோயிலில் விளக்கேற்றினால் புண்ணியம் கிடைக்கும்.

* மகிமை நிறைந்தவள் என்பதால் அம்பிகைக்கு மகமாயி எனப் பெயர் வந்தது.

* நவராத்திரியின் போது கோயில்களில் மகாசண்டி ஹோமம் நடக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us