ADDED : செப் 27, 2024 09:04 AM

எம்.லாவண்யா, கல்யாண்புரி, டில்லி.
*நவராத்திரி என்றால்...
ஒன்பது இரவுகள். இந்நாளில் அம்மனை வழிபடுவர்.
வி.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.
*நவராத்திரி பற்றி சொல்லும் புராணங்கள்...
மார்க்கண்டேய புராணம், தேவி பாகவதம்
டி.ஜோதிமணி, அவினாசி, திருப்பூர்.
*அமாவாசை அன்று கொலு பொம்மைகளை அடுக்கலாமா...
அமாவாசையன்று பொம்மைகளை அடுக்கி வையுங்கள். மறுநாளான பிரதமையில் இருந்து விஜயதசமி வரை கொண்டாடுங்கள்.
பி.பிரணவ், கன்னிவாடி, திண்டுக்கல்.
*கொலு வைப்பதன் நோக்கம்...
அம்பிகையை தினமும் ஒவ்வொரு வடிவமாக அலங்கரித்து வழிபடுவதே இதன் நோக்கம்.
ஆர்.ஆனந்தி, பூவரசன்குப்பம், விழுப்புரம்.
*நவராத்திரி எத்தனை நாள் கொண்டாடப்படுகிறது?
கர்நாடகாவில் தசரா என்னும் பெயரில் பத்து நாளும், மற்ற இடங்களில் ஒன்பது நாளும் கொண்டாடப்படுகிறது.
எம்.மிதுஷன், ராஜபாளையம், விருதுநகர்.
*ஆயுதபூஜையின் நோக்கம் என்ன
ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தொழில் கருவிகளுக்கு, நன்றி செலுத்தும் நாள்.
எல்.மாதவன், தச்சநல்லுார், திருநெல்வேலி.
*நவராத்திரியில் உடைகளை தானம் செய்யலாமா...
ஒன்பது நாளும் கொடுத்தால் நல்லது. சரஸ்வதி பூஜையன்று கட்டாயம் கொடுங்கள்.
கே.வைதேகி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*சாரதா நவராத்திரி என்றால்...
குளிர்காலத்தில் (சரத்ருது) கொண்டாடப்படுவதால் சாரதா நவராத்திரி என்கிறோம்.
ஆர்.ரம்யா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.
*நவராத்திரியில் பின்பற்ற வேண்டியவை என்னென்ன?
வீட்டை துாய்மை செய்தல், அம்மனுக்காக விரதம் இருத்தல், கொலு அலங்காரம் செய்தல், உறவினரை உபசரித்தல், ஆடல், பாடல் என கொண்டாடுதல், உயிர்களை நேசித்தல்
எஸ்.கார்த்திக், மாகடி, பெங்களூரு.
*கோயில்களில் எவ்வளவு காலமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது?
கோயில் உருவான காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.