Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஆக 30, 2024 08:42 AM


Google News
Latest Tamil News
கே.பாஸ்கரன், கரோல்பார்க், டில்லி.

*வியாபார வளர்ச்சிக்கு...

நேர்மை, உண்மையுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். வெள்ளியன்று காலை 6:00 - 7:00 மணிக்குள் மாரியம்மனை வழிபடுங்கள்.

ஜி.கிருஷ்ணன், கடையநல்லுார், தென்காசி.

*எதிரி தொல்லை மறைய...

சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி விளக்கேற்றுங்கள்.

ம.அபிநயா, எழும்பூர், சென்னை.

*விரதநாளில் உணவில் உப்பு சேர்க்கலாமா...

கந்தசஷ்டி(6 நாள்), நவராத்திரி(9நாள்) விரதத்தின் போது உப்பின்றி சாப்பிட்டால் கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறும்.

எஸ்.வினித், ஹலசூரு, பெங்களூரு.

*கிரகதோஷம் விலக...

பைரவருக்கு மிளகு, தேங்காய், பூசணிக்காய் தீபமேற்றுங்கள்.

ப.விஜயா, கன்னிவாடி, திண்டுக்கல்.

*புத்தாடைகளில் மஞ்சள் வைப்பது ஏன்?

இது மங்கலத்தின் அடையாளம், கிருமி நாசினி.

சி.முருகன், திருமங்கலம், மதுரை.

*தெய்வத்தின் சிலைகளை வீட்டில் வழிபடலாமா?

6 அங்குலம் (15 செ.மீ.,) உயர சிலையை வழிபடலாம். தினமும் நைவேத்யம் அவசியம்.

கே.ராதா, கருங்கல், கன்னியாகுமரி.

*திருஷ்டி சுற்றுவது ஏன்

நேர்மறை, எதிர்மறை எண்ணம் கண்கள் மூலம் வெளிப்படுகிறது. இதில் எதிர்மறை எண்ணத்தை தடுக்கவே திருஷ்டி சுற்றுகிறோம்.

பி.கமலம், அவிநாசி, திருப்பூர்.

*நிலப்பிரச்னை தீர...

செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிேஷகம் செய்யுங்கள். பழநி முருகனை தரிசித்தால் நன்மை அதிகரிக்கும்.

மா.பகவதி, திருநள்ளாறு, புதுச்சேரி.

*ஒரே மாதத்தில் இரு அமாவாசை, இரு கார்த்திகை வந்தால் விரதமிருக்க ஏற்றது எது?

4 நாளும் விரதமிருப்பது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us