Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஈஸ்வரியே...

ஈஸ்வரியே...

ஈஸ்வரியே...

ஈஸ்வரியே...

ADDED : ஜூலை 18, 2024 12:23 PM


Google News
Latest Tamil News
ஓம் அம்மையே போற்றி

ஓம் அம்பிகையே போற்றி

ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி

ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி

ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

ஓம் ஆதார சக்தியே போற்றி

ஓம் ஆதிபராசக்தியே போற்றி

ஓம் இருள் நீக்குபவளே போற்றி

ஓம் இதயம் வாழ்பவளே போற்றி

ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் இஷ்ட தேவதையே போற்றி

ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி

ஓம் ஈடிணை இலாளே போற்றி

ஓம் ஈகை மிக்கவளே போற்றி

ஓம் உமையவளே தாயே போற்றி

ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எலுமிச்சை பிரியாளே போற்றி

ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி

ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி

ஓம் ஏழையர் அன்னையே போற்றி

ஓம் ஐங்கரத்தவளே போற்றி

ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி

ஓம் ஓங்கார ரூபினியே போற்றி

ஓம் ஔடதம் ஆனவளே போற்றி

ஓம் கவுமாரித்தாயே போற்றி

ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி

ஓம் கரை சேர்ப்பவளே போற்றி

ஓம் காக்கும் அன்னையே போற்றி

ஓம் கிள்ளை மொழியாளே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி

ஓம் குங்கும நாயகியே போற்றி

ஓம் குறை தீர்ப்பவளே போற்றி

ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி

ஓம் கை கொடுப்பவளே போற்றி

ஓம் கோட்டை மாரியே போற்றி

ஓம் சக்தி உமையவளே போற்றி

ஓம் சவுந்தர நாயகியே போற்றி

ஓம் சித்தி தருபவளே போற்றி

ஓம் சிம்ம வாகினியே போற்றி

ஓம் சீரெலாம் தருபவளே போற்றி

ஓம் சீதளா தேவியே போற்றி

ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி

ஓம் செந்துார நாயகியே போற்றி

ஓம் செண்பகாதேவியே போற்றி

ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி

ஓம் சொல்லின் செல்வியே போற்றி

ஓம் சேனைத் தலைவியே போற்றி

ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி

ஓம் தத்துவ நாயகியே போற்றி

ஓம் தர்ம தேவதையே போற்றி

ஓம் தரணி காப்பாய் போற்றி

ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி

ஓம் தாலிபாக்யம் தருவாய் போற்றி

ஓம் தாமரைக்கண்ணியே போற்றி

ஓம் தீமை களைபவளே போற்றி

ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி

ஓம் துாய்மை மிக்கவளே போற்றி

ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி

ஓம் தேசமுத்து மாரியே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி

ஓம் தொல்லை போக்குவாய் போற்றி

ஓம் தோன்றாத் துணையே போற்றி

ஓம் நன்மை அளிப்பவளே போற்றி

ஓம் நலமெலாம் தருவாய் போற்றி

ஓம் நாக வடிவானவளே போற்றி

ஓம் நாத ஆதாரமே போற்றி

ஓம் நாகாபரணியே போற்றி

ஓம் நானிலம் காப்பாய் போற்றி

ஓம் நித்திய கல்யாணியே போற்றி

ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி

ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி

ஓம் நீதிநெறி காப்பவளே போற்றி

ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி

ஓம் நேசம் காப்பவளே போற்றி

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

ஓம் பவளவாய் கிளியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

ஓம் பராசக்தி மாரியே போற்றி

ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

ஓம் புற்றாகி நின்றவளே போற்றி

ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பிழை பொறுப்பவளே போற்றி

ஒம் பிள்ளையைக் காப்பாய் போற்றி

ஓம் பீடை போக்குபவளே போற்றி

ஓம் பீடோப ஹாரியே போற்றி

ஓம் புத்தி அருள்வாய் போற்றி

ஓம் புவனம் காப்பாய் போற்றி

ஓம் பூமாரித்தாயே போற்றி

ஓம் பூவில் உறைபவளே போற்றி

ஓம் பூஜைக்குரியவளே போற்றி

ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி

ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி

ஓம் மழைவளம் தருவாய் போற்றி

ஓம் மங்கள நாயகியே போற்றி

ஓம் மந்திர வடிவானவளே போற்றி

ஓம் மழலை அருள்வாய் போற்றி

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி

ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஈஸ்வரியே! மகமாயி! மாரியம்மா!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us