Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சபரிமலை செல்பவரா...

சபரிமலை செல்பவரா...

சபரிமலை செல்பவரா...

சபரிமலை செல்பவரா...

ADDED : நவ 21, 2024 01:33 PM


Google News
Latest Tamil News
ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அவர்களுக்கான டிப்ஸ் கீழே...



* மாலை அணிவதற்கு முன் பெற்றோரின் ஆசி, மனைவியின் சம்மதம் தேவை.

* கார்த்திகை, மார்கழி மாதப்பிறப்பு அன்று மாலை அணியுங்கள். அதற்கு நாள், நட்சத்திரம், பார்க்கத் தேவை இல்லை.

* கார்த்திகை முதல் தேதியில் மாலை அணியாவிட்டால் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம், புதன், சனிக்கிழமைகளில் மாலை அணியலாம்.

* கோயில் அர்ச்சகரிடம் மாலையைக் கொடுத்து, பூஜை செய்து குருநாதர் முன்னிலையில் அணிய வேண்டும். 18 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு செல்பவரே குருநாதர். அவரின் சொல்லைப் பின்பற்றுங்கள்.

* தினமும் காலை, மாலையில் குளிக்க வேண்டும்.

* உடுத்தும் ஆடை நீலம், காவி நிறத்தில் இருக்க வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் துாய்மையாக இருக்க வேண்டும்.

* எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

* முகச் சவரம் செய்து கொள்வதோ, முடி வெட்டுவதோ கூடாது.

* வீண் பொழுது போக்குகளில் ஈடுபடக் கூடாது.

* வெற்றிலைப் பாக்கு கூடாது.

* பகலில் துாங்கக் கூடாது.

* மெத்தை, பாயில் படுக்கக் கூடாது.

* செருப்பு அணியக் கூடாது.

* சிகரெட், மது அருந்துபவரின் அருகில் கூட நிற்கக் கூடாது.

* மாமிசம் சாப்பிடக் கூடாது.

* காம சிந்தனை கூடாது.

* வீட்டிற்கு விலக்கான பெண்களைப் பார்க்கக் கூடாது.

* துக்க நிகழ்ச்சி, பூப்புனித நீராட்ட விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ அவரும், குடும்பத்தாரும் செல்லக் கூடாது.

* ஆண் பக்தர்களை 'ஐயப்பா' என்றும், பெண் பக்தர்களை 'மாளிகைபுரத்தாள்' என்றும், சிறுவர்களை 'மணிகண்டா' என்றும் அழைக்க வேண்டும்.

* ஒரு பக்தர் மற்றொரு பக்தரை சந்திக்கும் போதும், பேச வேண்டிய அவசியம் வந்தாலும் பேச்சை முடிக்கும் போதும் 'சுவாமியே சரணம்' என சொல்ல வேண்டும்.

* வீட்டில் இருந்து கிளம்பிய பக்தர்கள், நேரடியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தான் முதலில் செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us