Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/படை வீடு

படை வீடு

படை வீடு

படை வீடு

ADDED : அக் 29, 2024 12:35 PM


Google News
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படை வீடாக கருதப்படுகிறது.

போர் புரியச் செல்லும் தளபதி படைகளுடன் தங்குமிடம் 'படை வீடு' எனப்படும். அவ்வகையில் சூரனை வதம் செய்ய முருகன் படையுடன் தங்கிய தலம் திருச்செந்துார் மட்டுமே. ஆனால், மற்ற தலங்களையும் சேர்த்து 'ஆறுபடை வீடு' என்கிறோம்.

வறுமையில் வாடுவோரிடம் வள்ளல் இருக்குமிடத்தை சொல்லி ஆற்றுப்படுத்துவது (வழிகாட்டுவது) அக்கால வழக்கம். அந்த வகையில் அமைந்த நுால்களை 'ஆற்றுப்படை' என்பர். இவ்வாறு பக்தர்களின் குறைகளைப் போக்கும் வள்ளலான முருகன் ஆறு தலங்களில் அருள்புரிகிறார் என சங்கப்புலவர் நக்கீரர் நுால் இயற்றினார்.

முருகனின் பெருமைகளைச் சொல்லும் நுால் என்பதால் இது, 'திருமுருகாற்றுப் படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, 'ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us