Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/ஆண்டவரே வல்லவர்

ஆண்டவரே வல்லவர்

ஆண்டவரே வல்லவர்

ஆண்டவரே வல்லவர்

ADDED : செப் 11, 2013 01:52 PM


Google News
Latest Tamil News
அமெரிக்காவின் சான்பிராசிஸ்கோ நகரைக் கட்டி முடிக்க பல நூறு ஆண்டுகளாயின. அந்த ஊரைப் பற்றி மக்களும், அதைப் பார்க்க வந்த வெளிநாட்டாரும் நிறையவே பெருமை அடித்துக் கொண்டார்கள்.

''ஆகா! இதைக் கட்ட என்ன பாடுபட்டார்களோ! இதுபோல், சொர்க்கம் உலகில் உண்டா?'' என்றெல்லாம் புகழ் வார்த்தைகள் வெளிப்பட்டன. கட்டிய பொறியாளர்களை மக்கள் மிகவும் புகழ்ந்தனர். ஆனால், ஒருவர் கூட 'கர்த்தரால் இது வந்தது' என்று உணரவில்லை.

ஒருநாள் பெரும் பூகம்பம் வந்தது. பாடுபட்டு கட்டிய அந்த நகரத்தில் இருந்த கட்டடங்கள் தவிடு பொடியாயின. தன் பெருமையை இழந்த அந்தப்பட்டணம் குப்பையாகிப் போனது தான் மிச்சம்.

இதுகுறித்து தேவஊழியர் ஒருவர் கூறும்போது,'' மனிதன் தேவனுடைய வல்லமையை ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது. இந்த பெரிய பட்டணத்தைக் கட்ட பலநூறு ஆண்டுகளாயின. ஜனங்களும் இவ்வூரைப் பற்றி பெருமை பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், கர்த்தரோ சிறிய பூமியதிர்ச்சியின் மூலமாக, நொறுங்கி கீழே விழும்படி செய்தார். மனிதனே! நீ ஒரு

போதும் தேவனை விட பெரியவனல்ல. விஞ்ஞானிகளே! நீங்கள் ஒருபோதும் கர்த்தரை விட வல்லமை உள்ளவர்கள் அல்ல,'' என்றார்.

ஆம்...ஆண்டவரே சர்வவல்லமை படைத்தவர். அதனால் தான் 'சர்வலோகாதிபா நமஸ்காரம்' என்று அவரைப் பாடிப் புகழ்கிறோம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us