Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/தகுதிக்கு மீறிய சிந்தனை வேண்டாமே!

தகுதிக்கு மீறிய சிந்தனை வேண்டாமே!

தகுதிக்கு மீறிய சிந்தனை வேண்டாமே!

தகுதிக்கு மீறிய சிந்தனை வேண்டாமே!

ADDED : செப் 19, 2013 03:36 PM


Google News
Latest Tamil News
ஒரு சலவைத்தொழிலாளி, பொதி சுமந்து செல்லும் தன் கழுதைகளை, ஒழுங்குபடுத்தி அழைத்துச் செல்ல ஒரு நாயை வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். நாயும் அவர் மீது கால்களை தூக்கிப்போட்டு விளையாடும். இதைப் பார்த்த கழுதைக்கு பொறாமை வந்துவிட்டது.

'இந்த எஜமானுக்கு என்ன ஓரவஞ்சனை... நாம் இவ்வளவு பொதிசுமந்தும் நம்மிடம் என்றாவது கொஞ்சியிருக்கிறானா' என்று எண்ணியது. தன் அன்பைத் தானே சென்று வெளிப்படுத்த எண்ணி, எஜமானன் வீட்டுக்குள் இருந்தபோது, உள்ளே சென்று, அவர் மீது காலை தூக்கிப் போட்டது. அவர் உடலில் காயம் பட்டு விட்டது.

கோபத்தில் கழுதையை உதைத்தார்.

அருகில் இருந்தவர்கள், கழுதைக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி, தங்கள் பங்குக்கு கட்டி வைத்து அடித்தனர். இப்போது கழுதையின் உடம்பெல்லாம் புண். ''எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்கு உரியதோ அவற்றை சிந்தித்துக் கொண்டிருங்கள்,'' என்கிறது பைபிள். நம் தகுதிக்கேற்ற செயல்பாடுகளே நம்மை வாழ வைக்கும். இல்லாவிட்டால், இந்தக் கழுதைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us