ADDED : அக் 20, 2023 05:31 PM

பொதுநலம் சுயநலம் என்றால் என்ன என கிராமத்தில் இருந்து வந்திருந்த தாத்தாவிடம் கேட்டான் ஆறாம் வகுப்பு படிக்கும் பேரன். நீ வாசிக்கும் புல்லாங்குழல் பொது நலம். நீ விளையாடும் கால் பந்து சுயநலம் என்றார் தாத்தா. சொல்வது புரியவில்லையே என கொஞ்சும் குரலில் சொன்னான். தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்திருப்பதால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கும் காற்றை பிறர் அனுபவிக்க இசையாக வெளியிடுவதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. இது தான் இரண்டிற்கும் உள்ள அர்த்தம் என்றார். சொல்வதை கூர்ந்து கவனித்த பேரனின் கண்களில் புரிந்த உணர்வை பார்த்து சந்தோஷப்பட்டார் தாத்தா.