ADDED : ஜன 26, 2024 07:42 AM
இத்தாலியில் பிறந்தவர் ராபர்ட் டி நொபிலி. இவர் கிறிஸ்தவ குருமார்களின் முன்னோடி. தாய்மொழியான இத்தாலி மட்டுமே இவருக்கு தெரியும். தமிழகம் வந்த பின்னர் சமஸ்கிருதம், தமிழ் மொழிகளை இலக்கண, இலக்கியத்துடன் கற்றார். இரண்டையும் நன்றாக பேச, எழுத பயிற்சி பெற்றார். ஆண்டவரின் நற்செய்திகளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் இவரே.