ADDED : ஜன 05, 2024 11:01 AM
மாட்டுவண்டியில் காளைகளை ஒன்றாக இணைக்க நுகத்தடி என்னும் தடியை பயன்படுத்துவர். வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த பழக்கப்படாத மாடுகளாக தான் அவை இருக்கும். வாழ்வில் இன்பம், துன்பத்தை சமமாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே நுகத்தடி. முன்பெல்லாம் திருமணத்தில் மணமக்கள் நுகத்தடிக்கு மரியாதை செய்யும் முறை இருந்தது.
திருமணத்தில் இணைந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய ஒருவருக்கொருவர் புரிந்து செயல்பட வேண்டும். காயப்படாத செயல்களும் சொற்களும் சிந்தனைகளும் இருவருக்கும் இருந்தாலே போதும். அவர்களது
வாழ்வில் தினந்தோறும் மகிழ்ச்சி தான் என்கிறது தேவமொழி.