ADDED : டிச 01, 2023 09:23 AM
உலகில் நடக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் வேராக இருப்பது பணம். 'பணத்தாசை எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்' என்கிறது பைபிள். சிரிப்புக்கும், கூத்துக்கும், கேளிக்கைக்கும் பணக்காரர்கள் விருந்து நடத்துவர். அதில் பரிமாறப்படும் திராட்சை பானம் போதை தரும். அப்போது பணம் ஒருவருக்கு ஒருவர் கைமாறும். மோசமான விஷயத்திற்கும் பணம் அங்கு பதில் சொல்லும். ஆனால் ஒன்றை மட்டும் பணத்தால் வாங்க முடியாது. அதுதான் ஆண்டவரின் கருணை.
“கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என நினைத்தால், உன்னுடைய பணம் உன்னுடன் அழிந்து போகும்”
“கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என நினைத்தால், உன்னுடைய பணம் உன்னுடன் அழிந்து போகும்”