ADDED : டிச 01, 2023 09:23 AM

மின்சாரத்தால் எரியும் விளக்கினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார் எடிசன். பல ஆண்டுகள் பரிசோதனையில் ஈடுபட்டார். இரண்டாயிரமாவது முறை அவருக்கு வெற்றி கிடைத்தது. இதை அறிந்த நிருபர் ஒருவர் இதற்காக இரண்டாயிரம் முறை தோல்வியை கண்டீர்களாமே அது உண்மையா எனக் கேட்டார். நான் ஒரு முறை கூட தோல்வி அடைய வில்லை. இதில் வெற்றி அடைய இரண்டாயிரம் பரிசோதனைகள் தேவைப்பட்டன. ஒவ்வொரு பரிசோதனையும் வெற்றியை நோக்கி நான் நடந்த மைல் கற்கள் என்றார் எடிசன்.