ADDED : நவ 17, 2023 01:29 PM
எதுக்கம்மா... நமக்கு மட்டும் முதுகில் மூடை போல உள்ளது என கேட்டது ஒட்டகக்குட்டி. அதற்கு தண்ணீர் சேமிக்க என்றது தாய். கழுத்து ஏன் நீண்டு உள்ளது என கேட்க, காடுகளில் வளரும் பெரிய மரங்களில் உள்ள இலைகளை சாப்பிட்டுவதற்கு என பதில் சொன்னது. கால்கள் ஏன் நீளமாக உள்ளது என மீண்டும் கேட்க, பாலைவனத்தில் மணலில் நடக்க ஆண்டவர் படைத்துள்ளார் என்றது தாய் ஒட்டகம். பிறகு பாலைவனத்தில் வாழாமல் பிறகு ஏன் சர்க்கஸ் கூடராத்தில் வாழ்கிறோம் என்று கேட்க, வாயடைத்து போனது தாய் ஒட்டகம்.
இன்றும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு அறிவு சீராக இருப்பதில்லை. பலருக்கு அறிவு இருந்தும் வாய்ப்பு சரியாக அமைவதில்லை. ஒன்று கிடைத்தும் ஒன்று கிடைக்க விட்டாலும் பலரும் ஒட்டகத்தை போலத்தான் வாழ்கின்றனர்.
இன்றும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு அறிவு சீராக இருப்பதில்லை. பலருக்கு அறிவு இருந்தும் வாய்ப்பு சரியாக அமைவதில்லை. ஒன்று கிடைத்தும் ஒன்று கிடைக்க விட்டாலும் பலரும் ஒட்டகத்தை போலத்தான் வாழ்கின்றனர்.