Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/ஆண்டவரின் சொல்லுக்கு தலை வணங்குவோம்

ஆண்டவரின் சொல்லுக்கு தலை வணங்குவோம்

ஆண்டவரின் சொல்லுக்கு தலை வணங்குவோம்

ஆண்டவரின் சொல்லுக்கு தலை வணங்குவோம்

ADDED : ஜூன் 01, 2010 11:53 AM


Google News
Latest Tamil News
வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் எத்தனையோ தேவமனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலம், அவர்கள் தேவனோடு உள்ள ஐக்கியத்தையும், தெய்வீக நற்பண்புகளை எப்படி வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பதையும் விவரிக்கிறதைக் காண்கிறோம். எனினும் அப்படிப்பட்ட தேவமனிதர்களில் அநேகருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. சிலருக்கு ஊர் பெயர் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் தரப் படாமல் உள்ளன.

ஆனாலும், அவர்கள் காட்டிய தேவபக்தியும் தேவப்பண்புகளும்தேவ ஊழியங்களை மதிக்கும் நற்பண்பும் மிகச்சிறப்பானவை. அவை நமக்கு பாடமாக நிற்கின்றன.

அந்த வரிசையில் எலியா தீர்க்கதரிசி தன்னுடைய வாழ்க்கையின் இக்கட்டான நாட்களில் சந்தித்த ஒரு பெண்ணைக் குறித்து வேதத்தில் ஒரே ஒரு அதிகாரத்தில் மாத்திரம் (1 இராஜா.17) வாசிக்கிறோம்.

அந்தப் பெண் கணவனை இழந்தவள். அவள் சாரிபாத் என்ற ஊரைச்சேர்ந்தவர். ஒரு சமயம் சாரிபாத்தில் மழை பெய்யவில்லை. கடும் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையின் காரணமாக தன் ஒரே மகனோடு அழிவின் விளிம்பில் வாழ்ந்து வந்தாள். எலியா தீர்க்கதரிசி சாரிபாத்துக்கு வந்தார். அவர் அந்த ஊருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல்நபர் இந்தப் பெண் தான். அவள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். தீர்க்கதரிசி எலியா அவளிடம், ""எனக்கு தண்ணீரும் கொஞ்சம் அப்பமும் கொண்டு வா,'' என்றார். அதற்கு அவள்,''பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று, உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப் போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதுக்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்,'' என்றாள்.

அப்பொழுது எலியா அவளைப் பார்த்து, ""பயப்படாதே; நீ போய் <உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும், முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பிறகு உனக்கும் <உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மீது மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்,'' என்றார்.

அவர் சொன்னதை முழுவதுமாய் விசுவாசித்தாள் அந்தப் பெண். ""அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள் (வ:15). அதாவது விசுவாசித்த வாக்குத்தத்தத்திற்கு கீழ்ப்படிந்து செயல்பட்டாள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின் படியே, மாவு செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து

போகவும் இல்லை''(வ.16) என்று வாசிக்கிறோம்.

கர்த்தரின் வார்த்தை அல்லது தேவனுடைய தீர்க்க தரிசிகளின் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டுமானால், இந்த ஏழைப்பெண்ணைப் போல் வார்த்தையை அப்படியே விசுவாசிக்க வேண்டும். விசுவாசித்துக் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படிந்து செயல்படுத்த வேண்டும். அப்பொழுது அந்த வார்த்தை நமக்கு வாய்க்கும்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இதைக்குறித்து தமது சீடர்களிடத்தில் சொல்லும்போது, ""உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்;

நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார். (மத்.10:40-42). தேவன் எல்லாவற்றுக் கும் பிரதிபலனை அளிப்பதற்கு கரிசனையுள்ளவராக இருக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us